Sunday 17 July 2022

SOLAR FLARES ( சூரிய அக்னி துகள்கள் )

சூரியனில் இருந்து வர கூடிய solar flare எனப்படும் அக்னி துகள்கள் காரணமாக பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Solar flare என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதை அக்னி துகள்கள் என்று அழைப்பார்கள். 

சூரியனை சுற்றி ஏற்படும் மிக தீவிரமாக மின்னணு காந்த புல கதிர்வீச்சுதான் அக்னி துகள்கள் என்று அழைக்கப்படும். நமது சூரிய குடும்பத்தில் ஏற்படும் மிக பெரிய வெடிப்பு என்றால் அது இதுதான்.

ஏன் இப்படி சூரியனை சுற்றி நடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.. சூரியன் ஒவ்வொரு 11 வருடமும் தன்னுடைய துருவங்களை மாற்றிக்கொள்ளும். அதாவது இதன் வட மற்றும் தென் துருவங்கள் இடமாற்றம் அடையும். வடக்கு தெற்கிற்கு செல்லும். தெற்கு வடக்கிற்கு செல்லும். இந்த மாற்றம் நடக்கும் சில நிமிடங்கள் சூரியன் மிகவும் கொதிநிலையுடன் காணப்படும். முழுமையாக மாற்றம் நடக்கும் அந்த நேரத்தில் சூரியனில் இருந்து மோசமான கதிர்கள் வெளியாகும்.

இதன் காரணமாக சூரியனை சுற்றி ஏற்படும் மிக தீவிரமாக மின்னணு காந்த புல கதிர்வீச்சு ஏற்படும். இந்த கதிர்வீச்சு காரணமாக அக்னி துகள்கள் எனப்படும் சூரியனில் இருந்து வெளியே வரும். பொதுவாக அக்னி துகள்கள் பூமியை நோக்கியோ அல்லது வேறு திசையை நோக்கியோ செல்வது வழக்கம். பெரும்பாலான நேரங்களில் பூமியை நோக்கி வராமல் ஆழ்ந்த ஸ்பேஸை நோக்கித்தான் அக்னி துகள்கள் சென்றுள்ளன.

அப்படியே பூமியை நோக்கி வந்தாலும் இதில் பெரும்பாலான துகள்கள் வரும் வழியிலேயே செயல் இழந்து விடும். சில பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததும் சிதறி சாம்பலாகிவிடும். இருப்பினும் அக்னி துகள்கள் காரணமாக நமது மின்னணு சாதனங்கள், தொடர்பு சாதனங்கள் ஆகியவை பாதிக்கப்படும். போன் போன்ற சாதனங்கள் அதிகம் பாதிக்கப்படும். ஏன் வானத்தில் காந்த புலத்தை அடிப்படையாக வைத்து பறக்கும் பறவைகள் கூட இதனால் குழப்பம் அடையும்.

இந்த அக்னி துகள்கள் மற்றும் சூரிய காற்று காரணமாக பூமியின் மேல் அடுக்கை நோக்கி திடமான காற்று மேலே எழுந்து செல்லும். இதனால் மேல் அடுக்கு மெல்லிசாக இருந்தாலும் அதில் அதிக எடை கொண்ட காற்று இருக்கும். இதனால் மேல் அடுக்கில் பறக்கும் செயற்கைகோள்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை இழக்கும். வேகம் குறைந்தால் தானாக அதன் உயரம் குறையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலே இருக்கும் drag காரணமாக அதன் வேகம் குறைந்து உயரம் குறைகின்றன. எல்லா வருடமும் இவர் 2.5 கிலோ மீட்டர் வரை உயரம் குறைகின்றன. ஆனால் கடந்த டிசம்பரில் இருந்து இவை வேகமாக உயரம் குறைந்து வருகின்றன. கடந்த 12 மாதத்தில் 20 கிலோ மீட்டர் வரை இவை உயரம் குறைந்து இருக்கின்றன. இப்போது அக்னி துகள்கள் காரணமாக இவை மேலும் உயரம் குறையும் அபாயம் உள்ளது என்று ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment