மாலாவோட பொன்விழா ஆண்டு முன்னிட்டு அப்பப்ப மாலா புராணம் இந்த blog ல வந்துகிட்டு இருக்கும்..
மாலாவோட சின்ன வயசு போட்டோ ஏன் போடலன்னு ஒத்தரு கேட்டாரு..முப்பது வருசத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோதான் கிடைச்சுது..
அத வச்சுதான் இன்னிய post -
நீண்ட கூந்தலுக்கு ஆசைப் படாத பெண்களே கிடையாது எனலாம்.
மாலாவுக்கு முழங்காலுக்கும் கீழ் வரை கூந்தல் வளரும்.
மாலாவோட நீண்ட கூந்தலுக்குன்னு நெறைய ஃபேன்ஸ் இருந்தாங்க.. எனக்கு அவளோட நீண்ட கூந்தல் ரொம்ப பிடிக்கும். "பின்னிய கூந்தல் கருநிற நாகம்" அப்டீங்கற பாடல்வரி அவளோட கூந்தலுக்கு பொருத்தமா இருக்கும்.
அறிவு வளருதோ இல்லியோ இது நல்லா வளருதுன்னு பொலம்பிகிட்டே இருப்பா.
அடிக்கடி கட் பண்ணினாலும் சீக்கிரம் வளர்ந்துடும்..
தினம்தோறும் சீவி முடிச்சு முடியை மெய்ண்டைன் பண்றதுக்கு சிரமப்பட்டா.
பாப் பண்ணிக்கணும்ன்னு சொல்லிக்கிட்டுருப்பா.
" உன் கூந்தல்தான் எனக்கு கிக்கு" இப்டி சொல்லி சொல்லி அவள பாப் பண்ணிக்காம தடை பண்ணிக்கிட்டுருந்தேன்..
குமார் கல்யாணத்துக்கு அப்புறம் அவ பாப் பண்ணிக்கேறேன்னு சொன்னப்ப வேற வழியில்லாம ப்யூட்டி பார்லருக்கு அழச்சிட்டுப் போனேன். பாப் பண்ணிக்கிட்டு வந்த மாலா எங்கிட்ட " இந்தாங்க..
நீங்க ஆசைப்பட்ட என்னோட கூந்தல்" ன்னு சொல்லி ரெண்டு அடி நீள
கூந்தல என் கைல குடுத்தா.
ப்யூட்டி பார்லர்ல இருந்த லேடீஸ் அப்புறம் பாக்குற எல்லாருமே இவ்வளவு நீள கூந்தல வெட்டிக்க எப்படி மனசு வந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க..! அந்த ரெண்டு அடி முடிக்கு பார்லர்ல பயங்கரப் போட்டி! முடியை அவங்களுக்கு
donate பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம்...
ரெண்டே வருசத்துல மாலாவுக்கு பழயபடி அதே நீளத்துக்கு முடி
வளந்துடுச்சி..
இதப் படிச்சுட்டு நம்ம "தண்ணி"காச்சலத்துக்கு வந்த டவுட்டு -
முடி நீளமா வளர்ந்தா வெட்டிக்கலாம்...!
நகம் நீளமா வளர்ந்தாலும் வெட்டிக்கலாம்...!
BUT
அறிவு வளர்ந்தா? ? ? ?
‘’’’
‘’’’
‘’’’
கவலைப் படாதீங்க...உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் வளராது