முதலில் தியானத்தில் உன்னைத் தயார் செய்து கொள்.
தியானம் என்பது எண்ணங்களற்ற மௌனம்.
அமைதி.
அந்த அமைதி ஏற்படும்பொழுது ஒருநாள் வழிபடுதல் மலர்ந்து வெளிவரும்.
உனக்குள்ளே ஒரு மொட்டு அவிழ்வதைக் காண்பாய்.
உனது இதயம் ஒரு மலராகி விடும்.
அப்போது அங்கே நறுமணம் கமழும்.
அந்த நறுமணமே வழிபாடாகும்.
நீ அப்போது தலை வணங்குவாய்.
இப்போது கடவுள் அதிக தூரத்தில் இல்லை.
அவர் மிகவும் அருகாமையில் இருக்கிறார்.
உனது மலர்ச்சியால் நீ அவருக்குப் பாலம் கட்டி விட்டாய்.
தியானம் இன்றி செய்யப்படும் வழிபாடுகள் வெறும் சடங்குகள்தான்.முட்டாள்தனமானவை.
தியானம் இன்றி செய்யப்படும் வழிபாடுகள் அர்த்தமற்றவை.
வீணாக நேரத்தையும் வாழ்வின் சக்தியையும் வீணாக்குதலேயாகும்.
ஆகவே உண்மையான வழிபாடானது கடவுள் உன்னோடு பேசுவதாகும்.
பொய்யான வழிபாடானது நீ கடவுளோடு பேசுவதாகும்.
- ஓஷோ
No comments:
Post a Comment