தேங்காய் பாலின் நன்மைகள் !!
தேங்காய் பாலில் வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.
தேங்காய் பால், உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றன. தேங்காய் பாலில் நிறைந்துள்ள மெக்னீசியம், உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் பொட்டாசியம் கலந்த உணவை உட்கொண்டால், இரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். எனவே இவர்கள் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ள தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பொட்டாசியம், உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.
சருமத்தில் உண்டாகும் எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய் பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாக தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்த மருந்தாகும்.
தேங்காய் பாலில் குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் அடங்கியுள்ளன. குழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலை சரிசெய்ய தேங்காய் பாலில் கசகசா மற்றும் தேன் கலந்து கொடுக்க வேண்டும்.
உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு முக்கிய ஊட்டச்சத்தாக விளங்கும் பாஸ்பரஸ், தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தி, இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இரத்தச்சோகையை உண்டாக்குகிறது. எனவே தினந்தோறும் ஒரு கப் தேங்காய் பாலை பருகுவதன் மூலம் நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதத்தைப் பெறலாம்.
தேங்காய் பாலில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படும்போது, கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலையும் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால் வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து நன்கு வளர்ச்சியடையும்.
No comments:
Post a Comment