Friday 10 November 2023

உலர் கருப்பு திராட்சை

ருப்பு திராட்சை பல உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணமாக உள்ளது. ஏனெனில், இவை உடல் இயக்கத்திற்கு உதவும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அதிலும் உலர் கருப்பு திராட்சைகளில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது முடி உதிர்தலைக் குறைப்பது , இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குவது,  உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் இரத்த சோகை நோயிலிருந்து பராமரிப்பது போன்றவற்றுக்கு கருப்பு உலர் திராட்சை மிகப்பெரிய அளவில் உதவுகிறது.  உடல் நலம் முன்னேற்றம் காண, தினசரி உணவில் இரண்டு கருப்பு உலர் திராட்சைகளை சேர்த்துக்கொள்வது நலம் தரும்.

உடலில் ஓடும் இரத்தம் அசுத்தமானால் சருமம் கரடுமுரடாதல், முகப்பரு பாதிப்புக்கு உள்ளாவது போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. உலர் கருப்பு திராட்சையை தவறாமல் உட்கொள்ளும்போது, இரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவு பொருட்கள் மற்றும் பிற அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. இதனால் மேம்பட்ட சருமப் பொலிவைக் கூட்டுகிறது.

 உலர் கருப்பு திராட்சையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது, உச்சந்தலையின் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் முடி உதிர்தல் குறைகிறது. திராட்சையில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. இதனால் இளநரையும் தவிர்க்கப்படுகிறது. இதில் பொட்டாசியம் தவிர, அதிக அளவு கால்சியமும் இருப்பதால்  எலும்புகளுக்கும் ஆரோக்கியமானது. உடலுக்குத் தேவையான கால்சியம் இதில் உள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான எலும்பு நோய்களுக்கு நிவாரணமாக அமைகிறது. எனவே, தினமும் உலர் கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் எலும்புகள் பலப்படும்.

No comments:

Post a Comment