Sunday 12 November 2023

ஆதிசங்கரர் - கேள்வி -- பதில்

 

1. எதை ஏற்றுக்கொள்ளவேண்டும்?                                 

குரு  உபதேசம்

2. எதை ஒழிக்கவேண்டும்?      
தவறான காரியங்களை

3. குரு என்பது  யார்?                                                                   
சத்தியத்தை உணர்ந்தவர்.சிஷ்யனின் நன்மையை கருதுபவர்

4. எது வேகமாக செய்யவேண்டியது?                                  
மறுபடி பிறப்பு இறப்பு  இல்லாமல் மோக்ஷம் அடைவதை.

5. எது  நல்லது உனக்கு?                                                            
தர்மம் ஒன்று  தான்.

6. எவன்  அறிவாளி?                                                                   
ஞானம் உடையவன்.

7. எது விஷம்?                                                                              
மூத்தோர்  வார்த்தையை  அவமதிப்பது

8. உலக வாழ்வில் முடிவானது எது?                  
                 
இந்த உலக வாழ்க்கையின் முடிவைப்பற்றி சிந்திப்பது.

9 ஒவ்வொருவரும் எதை நாடவேண்டும்?                         
எது தனக்கும்  பிறர்க்கும் நன்மையைப் பயக்குமோ அதை.

10 எது மதுவைப்போல்  கிறுகிறுக்க வைக்கிறது?          
ஆசை, நாட்டம். பற்று.

11.அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றிக்கொள்வது எது ?        

ஆசை ஒன்றே தான்.

12.உன்னுடைய  முதல் எதிரி யார்?       
                                
சோம்பேறித்தனம்

13. எல்லாரும்  பயப்படுவது எது?                                           
மரணம்

14. குருடனை விட  அதி குருடன் யார்?                                 
ஆசையில்,  பற்றில் சிக்கியவன்

15. எவன் திடமானவன்?                                                            
மனதை அடக்கி ஆள்பவன்

16. எது காதுக்குத்  தேன் ?                                                          
மேதைகளின், ஞானிகளின் அறிவுரை.

17. பிரபலமாவதற்கு ஆதாரம் எது?         
                               
எவரிடமும் உனக்காக  எதையும்  எதிர்பார்க்காதது.

18. எதை  அளவிடமுடியாது?                                                    
பெண்ணின்  ஈர்ப்பை

19. எவன் புத்திசாலி?                                                                    
பெண்ணிடம்  ஏமாறாதவன்

20. எது  துயரம்?                                                                             
எதிலும்  திருப்தி அடையாமல் இருக்கிறோமே  அது

No comments:

Post a Comment