Thursday, 2 November 2023

அரிஸ்டாட்டில்

 



அரிஸ்டாட்டில் ஒரு கிரேக்க தத்துவஞானி. கவிதை, நாடகம், இசை, அரசியல் மற்றும் அறிவியல் போன்றவற்றை தனது எழுத்துகளில் பிரதிபலித்த ஒரு வல்லுனராக விளங்கினார். மேற்கத்திய தத்துவங்கள் தோன்றுவதற்கு இவரே முக்கிய காரணமானவராக கருதப்படுகிறார். இவரின் இயற்பியல் கோட்பாடுகள், பிற்காலத்திய வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாவீரன் அலெக்சாண்டருக்கு நண்பராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் அரிஸ்டாட்டில்.

1. கல்வியின் வேர்கள் மிகவும் கடினமானது, ஆனால் அதன் பழம் இனிமையாது.

2. இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு.

3. கலையின் நோக்கம் வெளிப்புற விஷயங்களை பிரதிபலிப்பதல்ல, உள்ளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

4. தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த பண்பு இதுவே.

5. அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது.

6. பைத்தியக்காரத்தனத்தின் கலவை இல்லாத ஒரு சிறந்த மேதை எவருமில்லை

7. மகிழ்ச்சியானது நம்மைப் பொருத்தே அமைகின்றது.

8. ஒரு செயலின் நல்ல தொடக்கம் அதனை பாதியளவு முடித்துவிட்டதற்கு சமம்.

9. சமமற்ற விஷயங்களை சமப்படுத்த முயற்சிப்பதே சமத்துவமின்மையின் மோசமான வடிவம்.

10. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது, அந்த செயலை முழுமைபெற வைக்கின்றது.

11. எந்த ஒரு பரிந்துரை கடிதத்தையும் விட சிறந்தது தனிப்பட்ட அழகே.

12. தனித்திறன் என்பது செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.

13. மனதின் ஆற்றலே வாழ்க்கையின் சாராம்சம்.

No comments:

Post a Comment