Wednesday 15 November 2023

கசப்பான உண்மைகள்

 

  1. We will be loved for sure but never forever . நீங்கள் நிச்சயமாக பிறரால்( நெருக்கமானவர்களால்)நேசிக்கப்படுவீர்கள் . ஆனால், என்றென்றும் அல்ல .
  2. சில சமயங்களில் தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்பதை விட தெரியாதவரிடம் கேட்பது எளிது.
  3. என்னதான் மனம்,குணம் ,அன்பு என்றாலும்கூட பொதுவாக புறத்தோற்றமும் அழகும் அதிக ஆதிக்கம் செய்யும் .
  4. வாழ்க்கைக்காக வாழ்வாதாரத்திற்காக வேலை செய்வதை விட வேலையைப் பொருத்து வாழ்க்கையை தான் மாற்றி வாழ்கிறோம்.
  5. அறிவார்ந்த விசயங்களை விட அடுத்த வீட்டு கதைகளைக் கேட்க ஆர்வம் அதிகம்.அறிவுப்பூர்வமான விசயங்களை பேசும் போது boring எனப்படுபவர் ,gossip பேசினால் centre of attention ஆகி விடுவார்.
  6. ஒருவரின் படிப்போ,வேலையோ,அவரின் பொருளாதார நிலையோ ,அவரின் அறிவையும் ,நாகரிகமான சொல்/ செயல்கள் / நடத்தையை தீர்மானிக்காது.
  7. பலருக்கு கடவுள் , கஷ்டங்களை தீர்ப்பதை விட கஷ்டங்களை மனம் விட்டுச் சொல்லவே அதிகம் தேவைப்படுகிறார்.
  8. எல்லா தோல்விகளும் வெற்றிக்கு முதல் படி அல்ல.
  9. ஒருவரிடம் '' உன்னைப் பிடிக்கவில்லை "என்று சொல்வதை விட "பிடிக்கும்" என்று சொல்ல அதிக தைரியம் வேண்டும். அதேபோல் ஒருவரை திட்டுவதை விட பாராட்டுவது கடினம் . தொடர்ந்து 5 நிமிடம் / அரைமணிநேரம் திட்டும் நம்மால் ஒருவரை 5 வார்த்தைகள் சொல்லி பாராட்ட கஷ்டப்படுவோம்.
  10. Mild melancholy is poetic but beyond limit ,it is problematic or blabbering both in life and literature .                                                                     Thanks  Quora
  11.  

No comments:

Post a Comment