Saturday, 1 November 2025

புது மனைவியின் பத்து + ஒரு கட்டளை

 


ஒரு புது மனைவியின் பத்து + ஒரு கட்டளை 

கூடவே கணவனின் மைண்ட் வாய்ஸ்  )

1. உள்னுடைய மனைவி நானாகிறேன்.மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது.

கணவனின் மைண்ட் வாய்ஸ் - ஒன்ன கட்டிகிட்டு நான் படுகிற கஷ்டம் போதாதா! இதில் மற்றொன்றா ! )

2.கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது.அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.

( க மை வா - நீ எப்பவும் ஃபுல் மேக் அப்புடன் இருக்கும்போது வேறு எந்த பெண்ணும் எனக்கு அழகா தெரியாது ! )

3.இரவு 8.30 மணிக்கு Kitchen Close

க மை வா - swiggi, சோமேட்டோ ல தினம் வாங்குவதற்கு கிச்சன் திறந்து இருந்தால் என்ன மூடி இருந்தால் என்ன! )

4. இரவு 9.30 மணிக்கு Bedroom Close Close

க மை வா - அப்ப நான் ஹாலில் படுத்து தூங்குகிறேன்! )

5. தேங்காய் எண்ணை, ஷாம்பு, சோப்பு, துண்டு சொந்தமாய் எடுத்து கொண்டு போய் குளிக்க வேண்டும்.அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.

க மை வா - அடிப் பாவி என் சோப்பை தொடாதே, என் பேஸ்ட்டை தொடாதே என்று நீ தானே சொல்லவே எப்பவும் )

6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.

க மை வா - எப்பவும் பழைய சாப்பாடு தானே ஃப்ரிட்ஜில் இருப்பது ! )

7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.

க மை வா - அப்பா ப்ரெண்ட் வீட்டிலே படுத்து கொள்ளலாம்! )

8. சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம். கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது.

க மை வா - இது எல்லா வீட்டிலும் இருப்பது தானே! எங்களுக்கு மொபைல் இருக்கு, போதும் )

9.உறக்கத்தில் குறட்டை விடவோ, சத்தம் போடவோ கூடாது.

க மை வா - அடிப் பாவி நீ விடும் குறட்டை தான் பக்கத்து வீட்டு வரைக்கும் கேட்குதே! )

10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சன்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.

க மை வா - மாமியார் என் கூட இல்லை என்று பார்த்து தானே உங்க அப்பன் எனக்கு பொண்ணு கொடுத்தான் )

முக்கிய குறிப்பு:-

அண்ணே அந்த 11 பாயிண்ட் பயங்கரமா இருக்கு )

11. என்னிடம் கோபபட்டால் எனது அண்ணன்களிடமிருந்தும் தர்ம அடி விழும்.... 😆

( எனக்கும் ரெண்டு அண்ணன் இருக்காங்க பார்க்கலாம்! )

No comments:

Post a Comment