Tuesday, 25 November 2025

தோசை

 ஆசை ஆசையாய் இருக்கிறதே ! ஹோட்டலில் தோசை சாப்பிடும் போதே!

பாய் மாதிரி சுருட்டிக் கொண்டுவந்து வச்சாங்கன்னா அது சாதா தோசை

தோசை காத்துல பறக்காம இருக்க உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வச்சிக் கொண்டு வந்தா அது மசால் தோசை

பப்பூன் தொப்பி மாதிரி கூம்பு வடிவுல வந்தா அது நெய் ரோஸ்ட்

15 செமி வட்ட பரப்பளவுள 1செமி தடிமன்ல வந்தா அது கல்தோசை

அந்த கல் தோசையே ரெண்டு தோசையா வந்தா செட் தோசை

நாலா மடிச்சி கிழிஞ்ச ஓலைப்பாய் மாதிரி வந்தா அது ரவா தோசை

75 ரூபா தோசைல பத்து ரூபா சக்தி இட்லி பொடியைத் தூவி 150 ரூபாய்க்கு வித்தா அது பொடி தோசை,

தோசைல கண்ட இலை தழை களை போட்டு சுட்டா அது மூலிகை தோசை...

அப்புறம் போத்திக்கிற! பெட் ஷீட் மாதிரி சுத்தி எடுத்து வந்தா அது ஃபேமிலி ரோஸ்ட்!

கறி சமைத்து அதை உள்ளார வைத்து இருந்தா அது கீமா தோசை!

கடைக்குப் போனோமா சாப்டோமான்னு வந்தா அவன் மனுஷன்... இப்படி கண்டதையும் ஆராய்ஞ்சா அவன் பெரிய மனுஷன்...

அபலை கணவனின் புலம்பல் !-

பழைய புளித்த மாவு தோசையாக வருது என்றால் அது வெங்காய ஊத்தாப்பம்!

No comments:

Post a Comment