Tuesday, 21 April 2026

மகரிஷி அவர்களுடன் ....28






இன்றைய பதிவு ஞானவயலின் 28500வது பதிவு. இதுவரை ஞானவயல் பதிவுகள் 14 லட்சம் தடவை பாதிக்கப்பட்டுள்ளது. 48 நாடுகளிலிருந்து இப்பதிவுகள் படிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆரம்பித்த பல தொடர்கள் அப்படியே நின்று போயுள்ளன.

குறிப்பாக " மகரிஷி அவர்களுடன்..." பகுதி கடந்த 10 மாதங்களுக்கு மேல் எழுதப்படவில்லை.

எனவே " மகரிஷி அவர்களுடன் ...." அனுபவங்களை இன்று தொடர்கின்றேன். மாலா தனியாக எழுதுவதாக இருந்தாள். தற்போது அவள் பெற்ற அனுபவங்களை முடிந்தவரையில் இப்பகுதியிலேயே தொகுக்கின்றேன்.

மகரிஷி அவர்களுடன் ....28

1990ம் ஆண்டு பெல் பகுதியில் ன் வீட்டில் தவமையம் நடத்திக்கொண்டிருந்த என் நண்பர் காலை 7 மணிக்கே என் வீட்டிற்கு வந்து " செய்தி தெரியுமா? இன்றைய பேப்பரில் வந்துள்ளது. " சேலத்தினை அடுத்துள்ள இடத்திலியங்கிக்கொண்டிருந்த வாழ்க வளமுடன் பைனான்ஸ் நிறுவனம் 3.5 கோடி ரூபாய் தொகையுடன் ஓடிவிட்டனர். அதில் பணம் போட்டவர்களெல்லாம் பூட்டியிருக்கும் அந்த அலுவலகம் முன் கூடியுள்ளனர் " எனக்கூறி செய்தித்தாளினைக் கொடுத்தார். மேலும் அவர் " நான் இனி தவமையம் நடத்தமாட்டேன். தவறான இயக்கமாக இது பார்க்கப்படுகின்றது. நீங்களும் விலகி விடுங்கள். உங்களுக்கும் நல்லது " எனப் பலவாறாக பயப்பட்டார் / பயமுறுத்தினார். நான் அவரிடம் " இன்றுதான் இந்த செய்தி வந்துள்ளது. அதற்குள் விசாரிக்காமல் ஏன் முடிவெடுக்கின்றீர்கள் ? என்னைப் பொறுத்தவரையில் இந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கும், நம் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. நானும் விசாரித்து சொல்கிறேன் " என்று அவரை அனுப்பி வைத்தேன். அந்த வாரம் வந்திருந்த ஜூனியர் விகடனிலும் இந்த செய்தி வந்திருந்தது. தலைமறைவான அந்நிறுவனர்களை தேடும்ணி நடப்பதாக அதில் போடப்பட்டிருந்தது. என் நண்பர் பிறகு மன்றம் பக்கம் வரவே இல்லை

.இரண்டு மாதங்களில் நான் மகரிஷியை சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்த சம்பவத்தினைச் சொல்லி விளக்கம் கேட்டேன் . அதற்கு அவர்கள் " வாழ்க மற்றும் வளமுடன் இந்த இரண்டு சொற்களும் தமிழ் சொற்கள். எல்லோருக்கும் பொதுவானது. நான் ' வாழ்க வளமுடன் ' என இந்த சொற்களை வாழ்த்தப் பயன்படுத்துகின்றேன். அந்த நிறுவனமோ பிரபலமான இந்த சொற்களை வைத்து பணம் பண்ணப் பார்த்தார்கள். அவர்களுக்கும் நமது சங்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது " என்றார்கள்.

அப்போது நான் அவரிடம் " வாழ்க வளமுடன் " என்ற வாழ்த்தினை எந்த ஆண்டு உருவாக்கினீர்கள்? 1969ம் ஆண்டது வரை ' வளர்க நன்னெறி ' என்றுதானே வாழ்த்திவந்தீர்கள்? " எனக் கேட்டேன்.

மகரிஷி அவர்கள் " நான் எழுதிய தவமுறை அகவல் பாடல்கள் இறுதியில் வாழ்த்து தெரிவிக்க ' வாழ்க வாழ்க என் வாழ்க்கைத்துணைவி, வாழ்க வாழ்க என் குழந்தைகள் எல்லாம்......என எழுதியிருந்தேன். ஏனோ அதில் நிறைவு கிடைக்கவில்லை. வாழ்க என்பது நல்லதொரு வார்த்தை என்றாலும் எப்படி சிறப்பாக வாழ வேண்டுமென ஒரு வார்த்தை சேர்த்தால் நன்றாக இருக்கும் என சிந்தித்தபோது வளமுடன் என்ற வார்த்தை இறையருளால் கிடைக்கப்பெற்றது. வாழ்க வளமுடன் என சொல்லிப்பார்த்தேன். மிக இனிமையாக இருந்தது. என் இனிய நண்பர் தமிழ் அறிஞர் பேராசிரியர் இருசு பிள்ளை அவர்களிடம் இதனைத் தெரிவித்த்தேன். அவரோ தமிழ் இலக்கணப்படி வளத்துடன் என்றுதான் கூற வேண்டும். வளமுடன் என்று கூறுவது தமிழில் வழுவு என்பார்கள். இதனைத் திருத்தவேண்டுமென்பார்கள். எனவே நாம் சற்று ஆராய்ந்து இந்த சொல்லினைப் பயன்படுத்தலாமெனக் கூறினார். பிறகு அவரும் இன்னும் பல தமிழ் ஆசிரியர்களும் வளமுடன் எனச் சொல்வதில் எந்த இலக்கணப் பிழையும் கிடையாது எனது தெரிவித்தார்கள். 1970ம் ஆண்டு முதல் " வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! " என்பது மிகவும் பிரபலமானது " எனச் சொல்லி முடித்தார்கள்.

நாமும் தினமும் பலமுறை எல்லா திசைகளையும் நோக்கி வையகத்தினை வாழ்த்திக்கொண்டே இருப்போம்.


To read further on this subject, pl click HERE



No comments:

Post a Comment