Showing posts with label nature. Show all posts
Showing posts with label nature. Show all posts

Monday, 7 April 2014

NATURE....5


மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம்.  அருவியை நினைக்கும்பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். "வீங்குநீர் அருவி வேங்கடம்" என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர். "பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே" என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. "தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்" என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. 

 நீர்வீழ்ச்சி என்பது waterfall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழிபெயர்ப்புபோல் காணப்படுகின்றது. 

Sunday, 6 April 2014

NATURE....4


கடல் ஆமைகளுக்கு நீண்ட துடுப்பு போன்று உறுப்புகள் இருப்பதால் அவற்றால் எளிதாக கடலில் நீந்த முடிகின்றது. உடலின் முன்புறம் அமைந்துள்ள இந்த உறுப்புகள் ஒரு விமானத்தின் இறக்கைகளைப் போல உள்ளன. இந்த உறுப்புகள்தான் அன்றாட வாழ்க்கைக்கான இயங்கு சக்தியை ஆமைகளுக்குத் தருகின்றன. கடலில் ஆமை நீந்துவதைப் பார்ப்பது ஒரு வியப்பூட்டும் அனுபவம்!
 

உலகில் அதிக நாட்கள் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்று கடல் ஆமை. இதனுடைய மேலு ஓடு இதய வடிவில் இருக்கிறது. இது மிகவும் உறுதியானது. ஆமையின் மிருதுவான உடல் பகுதியை இது பாதுகாக்கிறது. ஆமையின் கழுத்து மிகச் சிறியது. ஆனால் சுருங்கி விரியக்கூடியது. சராசரியாக ஒரு ஆமை 115 கிலோ எடை இருக்கும்.
 

கடலில் வேகமாக நீந்தும் ஆமை, கடற்கரையில் மிக மெதுவாகத்தான் நடை பயிலும். இதற்கும் அந்தத் துடுப்பு போன்ற உறுப்புகள்தான் பயன்படுகின்றன. மணலில் ஊர்வது அதற்குக் களைப்பூட்டுவதாக இருந்தாலும் முட்டை போடுவதற்காகவே கடற்கரைக்கு ஆமை வருகிறது.
 

கடற்கரையில் முட்டையிட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்லும் ஆமைகள் மீண்டும் 30 ஆண்டுகள் கழித்துகூடத் தான் முட்டையிட்ட இடத்துக்குச் சரியாக வந்து சேரும். திரும்பவும் அதே இடத்தில் முட்டைகளை இடும். கடல்நீர் மட்டத்தை விட உயரமாக உள்ள பகுதியைத்தான் முட்டை இடுவதற்கு இவை தேர்வு செய்கின்றன. கடலில் பெரிய அலை வரும்போது கடற்கரையிலுள்ள முட்டைகளை அடித்துச் சென்று விடுவதைத் தவிர்ப்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு.
 

ஆமை கூடு கட்டுவது என்பது மணலில் குழி தோண்டுவதுதான். அந்தக் குழிதான் அதன் கூடு. அதற்குள் ஒரு சமயத்தில் எண்பதிலிருந்து நூற்று ஐம்பது முட்டைகள் வரை இட்டுவிட்டு குழியை மூடிவிட்டுச் சென்றுவிடும். இந்தக் குழிகளை மனிதர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது!
 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆமைகளின் முட்டையிடும் காலம். பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள் முட்டைகளை இடும். முட்டைகளை இட்டவுடன் அதன் வேலை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு முட்டைகளைப் பாதுகாக்கவோ, குட்டிகளைப் பார்ப்பதற்கோ பெரிய ஆமை வராது!முட்டைகளின் மேல் பகுதி மிருதுவாக, நெகிழும் தன்மையுடையதாக இருக்கும். மணல் சூட்டினால்தான் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. இப்படி முட்டைக்குள் இருந்து குஞ்சுகள் வெளிவர 55 நாட்கள் ஆகும்.
 

குட்டி ஆமைகளின் பற்கள் மிகவும் கூர்மையானவை. இதைக் கொண்டு முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளிவருகின்றன. வெளிவரும் குட்டிகளின் நீளம் 5 செ.மீ. இருக்கும்.
 

வெளியே வந்தவுடன், வந்த வேகத்திலேயே கடலுக்குள் இந்தக் குஞ்சுகள் சென்றுவிடும். கடலுக்குள் சென்றவுடன் லாகவமாக நீந்த ஆரம்பித்துவிடும்!
பின்னர் நெடும் பயணம்தான். வழியில் சிறிய நண்டுகளையும் நத்தைகளையும் உணவாக உட்கொண்டு வளர ஆரம்பிக்கும். ஏதாவது வெதுவெதுப்பான வளைகுடப் பகுதியைத் தேடிச் சென்றுவிடும். அங்கேதான் அவற்றின் வாழ்க்கையின் அடுத்த பகுதி ஆரம்பிக்கிறது. அங்கு சுமார் 10 ஆண்டுகள் வசிக்கும். அங்கிருக்கும் ஸர்காஸýம் என்ற கடற்பாசிகளை உண்டு வாழும்.
 

அதன்பிறகு அதிக ஆழமில்லாத பகுதிக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். அங்கு கிடைக்கும் சிறுசிறு நண்டுகள், நத்தைகள், சிறு இறால்கள் மற்றும் ஜெல்லி மீன்களை உண்டு வளரும். இந்த ஜெல்லி மீன்கள் அதிகம் இருந்தால் கடல் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஜெல்லி மீன்களின் எண்ணிக்கையைக் கடல் ஆமைகள் குறைப்பதால் "மீனவர்களின் நண்பன்' என்ற பெயரும் ஆமைக்கு உண்டு.
 

இப்போது கடல் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இவற்றைப் பாதுகாக்க கடல் உயிரின ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுகின்றனர்.
 

கடல் ஆமைகளைப் பிடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக பல அரசுகள் அறிவித்துள்ளன.

Saturday, 5 April 2014

NATURE....3



மின்னல்

     மின்னல் (Lightning) என்பது மழைக் காலங்களில் மேகங்களின் இடையே ஏற்படும் உராய்வினால் உருவாகும் ஒளிக்கீற்று ஆகும். கண்ணைப்பறிக்கும் ஒளியோடும், பேரொலியோடும் கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி. காற்றில் மின்னலின் வேகம் மணிக்கு 2,20,000 கி.மீட்டர் ஆகும். 30,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் மின்னலின்போது உருவாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
      
கரிய மழை மேகங்களில் இருக்கும் அணுக்கள், மேகங்கள் ஒன்றோடொன்று உராய்வதால் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டம் பெற்ற மேகக் கூட்டங்கள் அருகே வரும்பொழுது ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின்னாற்றல் பேரொளி வடிவாய் பாய்கின்றன. சில சமயங்களில் இந்த மின்னலானது நிலத்தில் பாய்ந்து பலத்த சேதத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
     
இவ்வாறு தோன்றும் ஒவ்வொரு மின்னலிலும் ஒரு பெரிய நகரத்திற்கு ஒரு ஆண்டிற்குத் தேவையான மின்சாரம் உருவாகிறது. அப்படி உருவாகும் மின்சாரத்தைச் சேமிக்க இயலாது என்பதால் அவை வீணாகின்றன. வானில் பறக்கும் விமானங்கள் மின்னல் உருவாகும் உயரத்திற்கும் மேல் பறப்பதால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. இருந்தும் சில விமான விபத்துகள் மின்னலால் நிகழ்கின்றன. ஒரு ஆண்டில் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் மின்னல்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மின்னல் பற்றிய படிப்பு Fulminology எனப்படுகிறது.

Friday, 20 December 2013