Thursday, 8 December 2022

நல்ல கணவன்


1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச்

 சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே
 சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப்
 பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை
 இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள்
 குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான
 பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய்
 தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால்
 அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த
 வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார்.
 எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க
 தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
 மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய்
 உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள்
 நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய்
 பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய்,
 தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம்
 வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து
 நிற்பார்.

Wednesday, 7 December 2022

OLD AGE JOKES

 






மருமகன்: 4 மகள்களையும் அடுத்தடுத்து கல்யாணம் செஞ்சு கொடுத்து கடமைய சரியா செஞ்சுட்டீங்களே? ரொம்ப பெரிய விசயம் மாமா.. நீங்க லெஜெண்ட்

மாமனார்: ரொம்ப சந்தோசம் மாப்ள.. அதுவும் நீங்க என்ன புகழ்றத நினைக்கும்போது பெருமையா இருக்கு..

மருமகன்: ஆனால், ஒரு சின்ன குறை இருக்கு மாமா.. ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன்

மாமனார்: அட இதுக்கு ஏன் தயக்கப்பட்டுக்கிட்டு.. தைரியமா சொல்லுங்க!

மருமகன்: ஒன்னுமில்ல, உங்கள் 4 மகள்களையும் புத்திசாலித்தனமா வளர்த்து இருக்கலாம்..

மாமனார்: அப்டியா.. ஆனால், இதுவும் நல்லதுதான். 4 மகள்களையும் புத்திசாலியா வளர்த்தால் அவர்களுக்கு ஏத்த மாதிரி புத்திசாலி மருமகன்களை தேடி இருக்கனும். அதுவும் உங்க மனைவி நிச்சயமா உங்கள கட்டிக்க சம்மதிச்சு இருக்க மாட்டா.. 4 பேரையும் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்க முடியாது.


தமிழ் இலக்கிய வகை

ஒரு மொழியில் காலம்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு, ஒரு மொழியில் காணப்படும் இலக்கியங்களை அவற்றின் அமைப்பு, உள்அடக்கம் அல்லது பொருள், யாப்பு முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவர். அவற்றை இலக்கிய வகைகள் எனலாம்.

தமிழ் மொழியிலும் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

TVU-Co1231d1

பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடு

வ.எண்
பேரிலக்கியம்
சிற்றிலக்கியம்
1)
பாட்டுடைத் தலைவனின் வாழ்க்கையை முழுமையாகக் கூறும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கூறும்.
2)
பாடல்களின் எண்ணிக்கை அல்லது பாடல்களின் நீளம் மிகுதி.
பாடல் எண்ணிக்கை குறைவு. ஆகவே குறுகிய அளவு உடையது.
3)
அறம் , பொருள் , இன்பம் , வீடு ஆகிய நான்கு பொருள் பற்றியது.
ஏதேனும் ஒரு பொருள் பற்றியது.

CONCENTRATION


 





EATING


 




Tuesday, 6 December 2022

உண்மையான அழகு எது?

 குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

உண்மையான அழகு எது தெரியுமா -
 ஒழுக்கத்தைத் தரும் கல்வி அழகே உண்மையான அழகு 
என்று சொல்கிறது நாலடியார்.

கல்வி என்றால் என்ன ? நிறைய புத்தகங்கள் வாசித்து வருவதும், பட்டங்கள் பெறுவதும் அல்ல  கல்வி.

ஒழுக்கத்துடன் , நல்லவர்களாக வாழ எது வழி காட்டுகிறதோ அதுவே கல்வி. 

ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்து இருந்தாலும், உலகம் அவனை போற்றாது.இராவணன் பெரிய கல்விமான் தான். "நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த" நா வன்மை கொண்டவன் தான். அவனிடம் அறிவு இருந்தது. ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லா கல்வியால் பயன் இல்லை.  

நல்லவர்களாக இருக்க வேண்டும். 

நடுவு நிலைமை பிறழாதவர்களாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டையும் தரும் கல்வியின் அழகே அழகு.

ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாலடியார்.

"நல்லம் யாம்" . நாம் நல்லவர்கள் என்று நம் மனதுக்குத் தெரிய வேண்டும். 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் 

என்பார் வள்ளுவர். 
நன்றி இணையம் 

HABITS FOR IMPROVEMENT