Monday 12 March 2012

POWER HOLIDAY!








தமிழ்நாட்ல பவர் கட் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி இப்ப எப்ப பவர் வருங்கிற
நெலம..! மாநிலத்த பல zone ஆ பிரிச்சுவாரம் ஒரு நாள் பவர் ஹாலிடே ன்னு
அரசாங்கம் அறிவிச்சிருக்கு..! திருச்சிக்கு சனிக்கிழமை பவர் ஹாலிடே!
பவர் கட் போயி இப்ப பவர் ஹாலிடே வந்துருக்கு..!

அப்பாடா...! சனிக்கிழமை லீவு ன்னு ஜாலியா இருந்தேன்..! வாழ்க்கையில
எனக்கு சனி லீவே கிடச்ச்துல்லே! எலிமெண்டரி ஸ்கூல், ஹை ஸ்கூல்,
காலேஜ், வேலையில எல்லா இடத்துலேயும் சனிக்கிழமை லீவே கிடைக்கிலே..
ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ப்ரோக்ராம் இருக்கிறதுனாலே இந்த பவர் ஹாலிடேயை
ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்..!ஆனால் BHEL க்கு லீவு இல்லன்னு சொல்லிட்டாங்க..!

தமிழ்நாட்ல இப்ப famous ஜோக் என்னான்னா -
திருநெல்வேலியில இருட்டுக்கடை அல்வா ரொம்ப பிரபலம்!
புதுசா வந்த ஒருத்தரு அங்க இருட்டுக்கடையைத் தேடிகிட்டு இருக்காரு..
" சார்! இருட்டுக்கடைக்கு எப்படி போகணும்? "
"தமிழ்நாட்ல இப்ப எல்லா கடையும் இருட்டுக்கடைதான்!"


Edited to add satellite image of India!!!

9 comments:

  1. அநியாயம்!! heard there is 10 - 12 hours power holiday everyday in MVM

    ReplyDelete
    Replies
    1. நம்ம முத்துக்குமாருக்கு செம அறுவட...
      மாயரத்துல inverter , UPS branch ஆரம்பிகிறாரு...

      Ask people in MVM to contact him!!

      Delete
    2. I am Glad for Muthu annan!!!. I heard getting batteries for Inverters are getting tougher, how is he managing!

      Delete
    3. yeahh...Good for Kumar :) one man's loss, another man's gain!!

      but...whats the use of inverter if power cut is 8 to 9 hours??? after 3 to 4 hours battery drains and it starts singing a melodious tune...

      Delete
  2. Power Holiday is Ridiculous!!! JP how to resolve this Powercut problem!!! This is getting more and more normal and as usual Tamilnadu people are getting used to it.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் உள்ள எல்லா இடங்களிலும்
      மின்வெட்டு அதிகமாகிக்கொண்டே போகின்றது..
      சென்ற ஆண்டு அஸ்ஸாம் சென்றிருந்தபோது மாநிலத் தலைநகர் கௌஹாத்தியிலியே
      40 % மக்கள் இன்னும் electricity இல்லாமல் அரிக்கேன் விளக்கையும், மெழுகுவர்த்திகளையும்
      பயன்படுத்துவதைப் பார்த்தேன்..
      இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 150000 MW மின்சாரத்தில் 30 % ஐ losses என்ற பெயரில் இழந்து விடுகின்றோம்..
      Efficiency குறைந்த மோட்டார், பம்ப், விளக்குகள், மற்ற உபகரணங்கள் பயன்படுத்தி வீணடிக்கின்றோம்.
      இலவச மின்சாரம், மின்திருட்டு போன்றவைகளில் வருமான இழப்பு மிக அதிகம்...
      திட்டங்கள் சரிவர செயல்படாததால் நிலைமை சீர்திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை!

      Delete
    2. ஐயோ பாவம் JP...but what u'll do, if Saturday is Holiday..?

      At same time, look at + side, energy saving, candle lit dinner and remember சுருளி's joke and loooots of thingx you can do on power-cut, send me PM to get ideas

      Delete
  3. Sometime back I wrote how I clarified a scientist's doubt regarding night time lights !

    http://srijp.blogspot.com/2011/07/scientist-doubt.html

    ReplyDelete
    Replies
    1. so Sri...when are you going to get back to blogging??

      Delete