Saturday 31 March 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 4

ஸ்ரீராமநவமி

அப்பாவுக்கு இஷ்ட தெய்வம் ராமர். அப்புறம் அனுமார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராம ஜபம் பண்ணுவாங்க..
கோடி முறைக்கு மேல ஜபம் சொல்லியிருக்காங்க.. அப்புறம் ஸ்ரீராமஜெயம் எழுதுவாங்க.. கோடி
தடவ எழுதுனும்ன்னு ஆசப் பட்டாங்க.. கிட்டத்தட்ட 85 லட்சம் தடவ எழுதியிருப்பாங்க. தெனம் சுந்தர காண்டம் படிப்பாங்க.. ராமாயணத்துல சுந்தர காண்டம் முக்கியமானது..அதுல ஹீரோ அனுமாரு.. மொத்தம் 68 சர்கத்த ( அப்பாவோட குரு சொல்லிகொடுத்த முறைப் படி ) படிப்பாங்க. அந்த particular முறையில படிக்கறச்ச மூணு மாசத்துக்கு ஒரு தடவ கடைசி chapter ல சரியா முடியும். அன்னிக்கு வீட்ல ரொம்ப கிராண்டா படையல் போடுவாங்க...வீட்ல இருக்குற மூணு அனுமார் படத்துக்கும் நெய்ல வடை சுட்டு மாலையா போடுவாங்க..அப்புறம் 108 நெய் விளக்கு வைப்பாங்க..எல்லா சாமி படத்துக்கும் மாலைப் போட்டு பூஜ பண்ணி படைப்பாங்க..
அம்மாவும் கோடி முறைக்கு மேல ராமஜெபம் சொல்லியிருக்காங்க..ஊர்ல யாருக்கு ஒடம்பு சரியில்லேன்னாலும், பிரச்சனன்னாலும் அவங்களுக்க்காகவும் ஜபம் பண்ணுவாங்க படையல் நடக்கும்போதெல்லாம் அலுத்துக்காம, தூங்காம எல்லா வேலையும் பாப்பாங்க. ( இந்த நெய் வடை ரொம்ப நாளக்கி இருக்கும். அம்மா எனக்காக ஒரு பாத்திரத்துல எடுத்து வச்சுருப்பாங்க..)
ராமர் பொறந்த நவமி பங்குனி மாசம் வரும்போது ஸ்பெசல் படையல் நடக்கும்.
பானகம், நீர்மோரு, வடை, சுண்டல்ன்னு படைச்சு மத்தியான நேரத்துல வெய்யில்ல தெருவுல போறவங்களுக்கெல்லாம் விநியோகம் நடக்கும். ஸ்ரீராமநவமி பொதுவா பரீச்ச எல்லாம் முடிஞ்சு லீவு நாள்ல
வர்றதால வீட்லேயும் பசங்க கூட்டம் அதிகமா இருக்கும்..
அப்புறம் நாங்க கட்டாயம் ஸ்ரீராமஜெயம் எழுதுணும்..ஜபம் பண்ணனும்..
அப்பா, அம்மா செஞ்ச பூஜாபலன் எங்கள நல்லா வச்சுருக்கு..
இப்ப எங்க வீட்ல மூணு " ராமர்" கள் இருக்காங்க..
சுந்தரராமன்
சிவராமன்
ஸ்ரீராம்
இன்னிக்கி ஸ்ரீராமநவமி.. இந்த நல்ல நாள்ல எல்லாரும் மகிழ்ச்சியா, நிம்மதியா எல்லா வளமும் பெற்று நிறைவா வாழ அப்பா, அம்மா நினைவோட வேண்டுகிறேன்!
வாழ்க வளமுடன்!



2 comments:

  1. Thanks Uncle for the wishes!!
    Every year ஸ்ரீராமநவமி reminds me lots of things.. first thing.. Amogh has the same star as that of Lord 'Sriram', then, Jayashree's B'day comes immediately after 'ஸ்ரீராமநவமி' (after one day)... then.. my mom, Nagaraj & Amogh's favorite god is 'Hanuman'.. who himself is a fav. of Lord 'Sriram'....
    Lastly, 'Mala' aunty gave me a powerful 'Sriram Jayaram'mantra....

    ReplyDelete
  2. Nice post JP. I still remember seeing Sri Rama Jayam notes from your father when I met him few times. Great person indeed with always willing tendency to help others.

    ReplyDelete