Thursday 8 March 2012

சமையல் ஞானம்



ஆழியாரில் ஒரு நண்பரை திருச்சி வரும்போது வீட்டுக்கு
சாப்பிட அழைத்தாள் மாலா -








" Jp யோட பொங்கல், ஸ்ரீராமோட டீ கிடைக்கும்ன்னு சொல்லுங்க... நிச்சயம் வாரேன் " என்றார் நண்பர்.அவ்வளவு பிரசித்தம் எங்களோட கைவண்ணம்!

எனக்கும், ஸ்ரீராமுக்கும் இந்த ஞானம் கொஞ்சம் ஜாஸ்தி..! மாலா இதுல ஓர் expert* ங்கிறதால ஸ்ரீராமுக்கு சின்ன வயசுலேருந்தே டீ போட, தோசை வாக்க இப்படின்னு பழக்கி அவன் +2 படிக்கும்போது ரொம்ப பிரமாதமா சமைக்க ஆரம்பிச்சுட்டான்..! அதுவும் புலவு பண்ண ஆரம்பிச்சாலே அந்த ஏரியா முழுக்க மணம் வீசும்.. பொண்ணுங்க எல்லாம் ஸ்ரீராமுகிட்ட வந்து " ஏண்டா..எங்க மானத்த வாங்குற....அவன் எப்படி சமையல் பண்றான்...நீங்களும் இருக்கீங்களே..ஒரு காப்பி போட கூட தெரியல..அப்படீன்னு எங்க அம்மா எங்கள திட்டுறாங்க..! " ன்னு சொல்லி பொலம்புவாங்க. . அப்புறம் அவன் பண்ற பிரியாணி/புலவை ஒரு கை பாப்பாங்க..!

மாலா அமெரிக்காவுல ஆறு மாசம் இருந்தப்ப ஸ்ரீராமும், நானும் காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சு ஏழரைக்குள்ள காலை டிபன், மத்திய லஞ்ச் ரெண்டையும் முடிச்சுடுவோம்.. எவ்வளவோ பேரு ஹெல்ப் பண்றேன் ன்னு வந்தாங்க.. சாயந்தரம் ஏழு மணிக்கு வாங்கன்னு சொல்லி அவங்கள அனுப்பிட்டு அவங்க வர்றத்துக்குள்ள ராத்திரி சாப்பாட்டை ரெடி பண்ணி வச்சிடுவோம்..வந்தவங்கள சாப்பிட வச்சு அனுப்புவோம்...
இந்த ஆறு மாதத்துல நெறைய்ய வரைட்டியா சமைச்சு, சமைச்சு சமையல்ல நளச் சக்கரவர்த்தியா ஆயிட்டோம்..! ஒரு ஹோட்டல் நடத்துற அளவுக்கு எங்களுக்கு ஞானம் இருக்கு...!
மாலா திரும்பி வந்தவுடனே ஸ்ரீராம் அடிச்ச statement ரொம்ப famous -
" இந்த லேடீஸ் எல்லாம் அரை மணி நேரம் சமையல் செய்றதை ரெண்டரை மணி நேரம் எடுத்துக்கிறாங்க.. எல்லாம் ஃபிராடுங்க...! “

என்னோட சமையலப் பத்தி சொல்லுணும்னா ஒரு நிகழ்ச்சி - இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னாடி சுவிட்சர்லாந்த் போயிருந்தப்ப நா பண்ணுன பிசிபேளாபாத் ஒத்தருக்கு ரொம்ப பிடிச்சுப்போய் நல்லா ரசிச்சு, ருசிச்சு
சாப்பிட்டுவிட்டு அதுல கொஞ்சத்தை Alps ( Jungfru - top of Europe ) உச்சியில ஐஸ்ல புதைச்சு வச்சாரு..ஒரு time capsule மாதிரி.. !!

*An expert is a person who has made all the mistakes that can be made in a very narrow field அப்டீன்னு தப்பா புரிஞ்சுகிட்டிருக்கீங்க...ஒரு துறையில எல்லாம் தெரிஞ்ச திறமைசாலின்னு அர்த்தம்..!





6 comments:

  1. ஆமா ...நீங்க எந்த ஸ்ரீராம பத்தி சொல்றீங்க ????

    switzerland jungfrau மலைக்கு போனா உங்க பிசிபேள பாத் சாப்டலாமா??? inspiring me to plan a trip to swiss now :)

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பேருதான் செலக்டிவ் அம்னீசியா...!!!

      Delete
    2. ohh...ஸ்ரீராமுக்கு வந்திருக்கிற வியாதிய பத்தி சொல்றீங்களா ???

      Delete
    3. ஆமா..என் புள்ளாண்டானுக்கு வந்துருக்குற புத்திசாலிதனமான வியாதி...!

      Delete
    4. அந்த புத்திசாலிதனமான வியாதி இங்கே செல்லாது !! :)

      Delete
  2. i second sheila; chitappa must be talking about some other sriram; while he was with us he never cooked - except a regular tomato rice- and made tea for me , but no 'narumanam' from it:)

    ReplyDelete