Wednesday 27 September 2023

கதை சொல்லி பணம் சம்பாதிக்க 13 வழிகள்

 


பொதுவாக பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு என்பார்கள்.அதில் ஒன்றுதான் கதை சொல்லி பணம் சம்பாதிக்கு முறை, அது எப்படி கதை சொல்லி பணம் சம்பாதிக்க முடியும் என நினைக்கிறீர்களா? அதைப்பற்றிதான் இந்த கட்டுரையில் சொல்லி இருக்கோம் வாங்க தெரிஞ்சுக்கலாம் வாங்க..

1. உங்களுடைய குரலில் பதிவுச் செய்யப்பட்ட ஒலிப்புத்தகங்கள் ஸ்பாடிபை போன்ற இணையதளத்தில் வெளியிடலாம் - ஒலிப்புத்தகங்களை விற்பதன் மூலம், எளிய முறையில் பணம் ஈட்டலாம்.

2. பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களுக்குக் கதை சொல்வதற்காகச் சென்று பணம் ஈட்டலாம் - பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் போன்றவை தங்களது மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் முறையே கதைகளைப் பகிர்ந்து, அவர்களுக்கு பல்வேறு வாழ்க்கைப் பாடங்களைப் புகட்டுகின்றனர். கதைசொல்லிகளுக்கு, அங்கு வரவேற்பு உண்டு.

3. புத்தகங்கள் எழுதலாம் - கதைசொல்லிகள் பல புத்தகங்களைப் படிப்பதால், புதிய புத்தகங்கள் எழுத அவர்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கும். புத்தகங்கள் எழுதுவதன் மூலம், பணம் ஈட்டலாம்.

4. நிற்கும் நகைச்சுவையாளர்களாகப் (Stand-up comedians) பணியாற்றலாம்: நகைச்சுவைக் கதைகளைக் கொண்டு, நிற்கும் நகைச்சுவையாளராக, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணம் ஈட்டலாம்.

5. கதை சொல்லி வகுப்புகள் நடத்தலாம் ; கதை சொல்வது என்பது அருமையான ஒரு கலை. அதனைக் கற்றுக் கொடுக்க வகுப்புகள் நடத்தி, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

6. திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுக்கலாம் ; கதை சொல்லிகளுக்கு ஏற்கனவே, உணர்வுப் பூர்வமாக பேச வரும் என்பதால், திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துப் பணம் ஈட்டலாம்.

7. திரைப்படங்களில் கதைக் குழுவில் பணி புரியலாம்; திரைப்படத்தினை உருவாக்குவதற்கு கதைக் குழுவில் பல்வேறு யோசனைகள் தேவைப்படும். கதைசொல்லி பல கதைகள் படிப்பதால், அவர்களால் யோசனைகள் சொல்வது எளிதாக இருக்கும்.

8. யூடியூப் போன்றவற்றில் காணொலிகள் பதிவேற்றி பணம் ஈட்டலாம் ; கதைகளை யூடியூப் போன்றவற்றில் பதிவேற்ற, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

9. துறை சார்ந்த வல்லுநராகி, வல்லுநர் உரைகள் நிகழ்த்தலாம். குறிப்பிட்டத் துறையில் நிபுணத்துவம் வளர்த்து, அது சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசி, துறையில் வல்லுநராகலாம்.

10. கதை சொல்லல் பயணம் மேற்கொண்டு, பல்வேறு ஊர்களில் கதைசொல்லி, அதன் மூலம் பணம் ஈட்டலாம். சிறிது பிரபலமான பின்னர், இதன் மூலம், பணம் ஈட்டுவது எளிதாகும்.

11. கதை சொல்லி களுக்கு கதை சார்ந்த வட்டார வழக்கு நன்றாக வரும் என்பதால் பதிப்பகங்களில் வேலை செய்து அங்கு புத்தகங்களின் உரையாடல் மேம்படுத்தல்கள் செய்யலாம்

12. கதை சொல்லிகளுக்கு உணர்வுபூர்வமான நடிப்பு வரும் என்பதால் நாடகங்களில், திரைப்படங்களில் பங்கு கொள்ளலாம

13. பல்வேறு இலக்கியங்களை படிப்பதால் இலக்கிய கூட்டங்களில், பேச்சாளராக‌ இலக்கியம் சார்ந்த, எழுத்தாளர்கள் குறித்த உரைகளை நிகழ்த்தலாம். மேலும் புத்தகங்கள் எழுதலாம். உதாரணத்திற்கு பவா செல்லதுரை கதை சொல்லியாக நன்கு பிரபலமாக உள்ளார். அவர் கதைசொல்லலின் மூலம், உலகெங்கும் பயணிக்கிறார். கதை சொல்லுதல் மூலம், அவர் பணம் ஈட்டுகிறார்.

No comments:

Post a Comment