குறிஞ்சிக்கோர் கபிலர் என்று புகழப்படும் கபிலர் ஒரு ஆணின் வெட்கத்தைக் கூறும் பாடல் இது. சங்ககாலத்தில் ஒரு ஆணுக்கு நாணமா என்றால் ஆம் வந்திருக்கிறதே என்கிறார் கபிலர் . புலவர் சொல்வதும் மெய்யே! மெய்யே.!
போட்டுக் கொண்ட வெற்றிலையால் சிவந்த நாக்கு , ஆனாலும் வெற்றிலைக் கறைபடாத வெண்ணிறப் பற்கள் கொண்ட அழகிய வாய் அவளுக்கு. ஆனால் அவளோ அதிகம் பேசமாட்டாள் . வாயாடிப் பெண்ணல்ல என்பதால் ஊராரின் நல்லபிப்பிராயத்தைச் சம்பாதித்து வைத்திருக்கிறாள் . அத்தகைய பெண்ணைத் திருமணம் செய்த தலைவனைப்பார்த்து ஊரார் ‘ இவன் நல்ல பெண்ணின் கணவன்’ எனக்கூறக் கேட்டவன் சற்று நாணம் அடைந்தானாம் என்பதனை
“ அமிழ்து பொதி செந் நா…………….
பல்லோர் கூற யா அம் நாணுகம் சிறிதே……”
என்ற பாடல் மூலம் கூறுகிறார்.
இதே கபிலர் குறிஞ்சி நிலத்துப் பெண் ஒருத்தியின் புலம்பலைக் கூறுகிறார் நன்றாகக் கழுவி சுத்தம் செய்யப்பட்ட யானையின் கருமை நிறத்தை ஒத்த என் கரு விழியையும் , கழுவிவிடப்பட்ட தரையை ஒத்த வெண்ணிறப்படலத்தையும் கொண்ட குவளை மலர் போன்ற என் கண்களில் என் காதலன் தந்த காதல் நோயால் பசலை படர்ந்து விட்டது என்கிறாள் அப்பெண் இதனை
“மாசு அறக் கழீ இய…………..
பசலை ஆர்ந்தன நம் குவளை அம்
கண்ணே”
என்பது பாடல். புலவர்களின் கண்களுக்கு எதுவும் தப்பாது போலும்
No comments:
Post a Comment