கடுகடுப்பாகிப் போன நம்ம வீட்ல இருக்குற பர்னிச்சர்ஸ்' & ஹோம் அப்ளையன்ஸஸ்' க்கெல்லாம் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?
(#ச்சும்மா ஒரு கற்பனை தான்)
*1) சேர் :*
வெயிட்ட குறை,
குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா..
மாடு மாதிரி கனத்துக்
கிடக்குற பாரு..
*2) ஃபேன் :*
நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்னய இப்டி சுத்தவிடுற?
*3) டிவி :*
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டுப் பாடா படுத்துறீங்க?
*4) தலையணை :*
நாளைக்காவது குளிடா...!! நாத்தம் கொடலப் புடுங்குது...!!!
*5) ஃப்ரிட்ஜ் :*
சாம்பாரு, புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...
இதத்தவிர வேற எதையுமே வைக்க மாட்டீங்களா டா...??
*6) ட்யூப் லைட் :*
நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்னய வந்து எரிய விடுறியா..??
*7) கண்ணாடி :*
இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத...
எனக்குப் பயமா இருக்குதுல்ல..
*8) கிரைண்டர் :*
ம்ம்ம்... அப்படித்தான், உன் தலய சொரிஞ்சுட்டே வந்து கைய உள்ள விடு...!!!
*9) மெத்தை:*
டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா பன்னி!..
*10) மிக்ஸி :*
மூடிய மூடாமத்தான் ஒரு நாள் உன் கைய உள்ள விட்டுப் பாரேன்...!!!
*11) வால்க்ளாக் :*
இப்ப என்னய பாத்து, நீ என்னத்த கிழிக்கப் போற...???
பேசாம மறுபடியும் படுத்துத் தூங்கு!
*12) வாசிங்மெஷின் :*
பாக்கெட்ல காசு பணம், சேஃப்டி பின் இருக்கான்னு செக் பண்ண மாட்ட?
*13) மிதியடி :*
என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?,
மரியாதையா என்னய தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!!
*14) சேவிங் ட்ரிம்மர் :*
இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு மூஞ்சியப் போட்டு இப்டி சொரண்டி எடுக்குற...??
*15) மொபைல் சார்ஜர்:*
உன் வாயத் தொற...!!
அப்டியே அதுலயும் கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!!
*16) பாத்ரூம் விளெக்கமாறு :*
தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!!
*17) அயர்ன்பாக்ஸ் :*
அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!!
*18) சர்ட் ஆங்கர் :*
அடேய் மகனே...!,
உன் சட்ட காலர கொஞ்சம் பாரு...!! உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!!
உள்ளதை சொன்னேன் உண்மையைச் சொன்னேன்.
🙏

No comments:
Post a Comment