எங்கள் பெற்றோர்கள், முன்னோர்கள் செய்த புண்ணியங்களினால் மகரிஷி அவர்களுடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதுவும் மாலா மஹரிஷியின் செல்ல மகளாகவே விளங்கினாள். இருவருக்குமிடையே தாத்தா - பேத்தி உறவு என்று கூட சொல்லலாம். மிகவும் உரிமையாக வாதிடுவாள்.
ஒவ்வொரு மாதமும் ஆழியார் சென்று மகரிஷி அவர்களுடன் உரையாடிவிட்டு வருவாள். மகரிஷியுடன் அவளுக்கு ஏற்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட அனுபவங்கள் சொல்லமுடியும்.
ஸ்ரீலங்காவில் மனவளக்கலை மன்றம் துவக்கப்பட்டு சிறப்பாக நடந்தது. மகரிஷி அவர்கள் பெண்களிடையே இக்கலை அதிகமாக செல்லவேண்டுமென விரும்பி மாலாவினை ஸ்ரீலங்கா செல்லுமாறு பணித்தார்கள். அப்போது உள்நாட்டு போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
மாலாவும் மகரிஷி விருப்பப்படி ஸ்ரீலங்கா சென்றாள். முதல்முறை துணைக்கு ஸ்ரீராம் கூடச் சென்றான். இருவருமாக நூற்றுக்கணக்கானவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
மகரிஷி பிறந்தநாள் விழா அங்கு சிறப்பாக நடைபெற்றது. பலரும் ஸ்ரீராமை பேச அழைத்தனர். மேடைப்பேச்சு பழக்கமில்லாததால் மிகவும் தயங்கினான். எல்லோரும் வற்புறுத்தவே பேசினான். அது மிக சிறந்த பேச்சாக அமைந்து எல்லோரும் அவனைப் பாராட்டினார்கள். அவன் பேசியதில் ஒரு பகுதி கீழே கொடுத்துள்ளேன். மாலாவிற்கும் மிக பெருமையாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் TCS ல் வேலைக்கு சென்றுவிட்டான். அவனுக்கு மாலா எழுதிய கடிதம் கீழே -
TO READ A PORTION OF SRIRAM'S
SPEECH AT COLOMBO,
PL CLICK HERE
His speech was appreciated by many and Mala was very proud. She had written a letter to Sriram ( scanned copy of which is given below ).


No comments:
Post a Comment