Monday 2 September 2013

திகில் கதை ...2

கும்மிருட்டு.

காற்றும், மழையும் சேர்ந்து அந்த மலைப்பகுதியை மேலும் பயங்கரமாக ஆக்குகின்றது..

வளைந்து, வளைந்து செல்லும் .மலைப்  பாதையில் 
மகேஷ் நிதானமாக கார் ஒட்டி வருகையில் 
கார் டயர் பஞ்சர் ஆகி விடுகின்றது.    காரை சாலையின் ஓரமாக நிறுத்தி உதவிக்கு யாராவது 
வருவார்களா எனப் பார்க்கின்றான்.

காற்றின் வேகத்தில் மர இலைகள் சலசலக்கும் சப்தம், விலங்குகளின் ஊளை, விடாமல் கொட்டும் மழை அவனுக்கு பயத்தை உண்டாக்குகின்றது.

அவன் வந்த வழியில் தூரத்தே வெளிச்சம் தெரிகின்றது.

மெதுவாக அந்த வெளிச்சம் அவனை நெருங்குகின்றது.

வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு கார் மிக மெதுவாக வருவதைப் பார்க்கின்றான்.
.
மழையிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த மகேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் மெதுவாக வந்து கொண்டிருந்த அந்த காரின் பின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்து கொள்கிறான்.

மெதுவாக டிரைவரைப் பார்க்க.....

டிரைவர் ஸீட்டில் யாருமே இல்லை!

ஆனால் கார் மெதுவாக முன்னே சென்று கொண்டிருக்கின்றது.

மகேஷுக்கு பயம் அதிகரிக்கின்றது.

மலைப்பாதையில் ஒரு கொண்டை  ஊசி வளைவு வருகின்றது..

" ஐயோ! கார் நேரே போகின்றதே! நம் ஆயுள் அவ்வளவுதானா?" - மகேஷுக்கு 
நெஞ்சம் மேலும், மேலும் துடிக்கின்றது.

திடீரென ஸ்டீரிங் வீலை ஒரு வெளிரிய கை பற்றி கார் மலையிலிருந்து விழாமல் சாலைக்குத் திருப்பி விடுகின்றது.

மகேஷுக்கு நிம்மதி.... 

"அந்த கை எங்கே போயிற்று?" மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கின்றது.

கொஞ்ச நேரத்தில் சாலையில் இன்னொரு திருப்பம் வருகின்றது...

" இந்த தடவை நாம் நிச்சயம் செத்தோம் "  - மகேஷ் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க 

மறுபடியும் அந்த கை தோன்றுகின்றது. காரை சரியான பாதையில் திருப்பிவிட்டு மறைந்து விடுகின்றது.

" நடப்பது நடக்கட்டும்" என்று மகேஷ் காரில் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றான்.

ஒவ்வொரு முறையும் சாலையில் திருப்பங்கள் வர, அந்த மாயக்கை 
தோன்றி காரை சரியான பாதையில் திருப்பிவிடுவது தொடர்ந்து நடக்கின்றது.

மகேஷுக்கு நம்ப முடியவில்லை - தன்னை இப்படி யார் காப்பாற்று கின்றார்கள் என பயத்துடன் உட்கார்ந்திருக்கையில் தூரத்தே 
வெளிச்சம் தெரிகின்றது.

அது ஒரு டீக்கடை என்று தெரிந்தவுடன் மகேஷ் கார் கதவைத் திறந்து வேகமாக ஓடுகின்றான். அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு டீ ஆர்டர் பண்ணிவிட்டு . நடுங்கிய குரலில் அங்கிருந்தவர்களிடம் தனக்கு நேர்ந்த அமானுஷ்ய சம்பவத்தை சொல்ல தொடங்குகின்றான்.

அப்போது .

.



 கார் அங்கு நிற்கின்றது.




இரு உருவங்கள் மழையில் நனைந்தபடி, சேறும்  சகதியுமாக  டீக்கடை நோக்கி வருகின்றன.

ஒரு உருவம் மகேஷைச் சுட்டிக்காட்டி சொன்னது -













" இங்க உக்காந்திருக்காண்டா ....நாம கஷ்டப்பட்டுத்  தள்ளிக்கிட்டு வந்த காருல நடுவழியில ஏறிகிட்டவன்!."

No comments:

Post a Comment