Saturday 21 September 2013

WEEKEND WISDOM



வினா:

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?




விடை:




செயலுக்குதக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது. செயலுக்கும் விளைவுக்கும் இடையே கால நீளம் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயலுக்கும் விளைவை இணைத்து பார்ப்பதில் தவறு ஏற்படுகிறது. ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம். மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம். ஒரு செயல் அதை செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து நான்கு தலைமுறைக்கு பின் விளைவு வரலாம். ஆக கணித்து இணைத்து பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கை சட்டத்தில் தவறு இருக்க முடியாது.


வினா:




இன்றைய வாழ்க்கையில் கொலை செய்வோர், கற்பழிப்போர், களவு செய்வோர் ஆகியோர் பால் சினம் கொள்ளாமல் வாழ இயலுமா?




 விடை:




கற்பழித்தல், திருடுதல் முதலிய குற்றங்கள் செய்பவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு அவர் மீது சினம் எழாமல் இருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் உள்நோக்கி பாருங்கள். நமது ஆயுளிலே தெரிந்த வரையில் எத்தனை குற்றங்களை செய்திருப்போம். அவ்வாறு பல குற்றங்கள் செய்த நிலையிலே, அதாவது பிடிபடாத குற்றவாளிகளாக ஒவ்வொருவரும் இருக்கும் போதே வேறு ஒருவர் குற்றம் செய்யும்போது ஒத்துப்பார்த்து, அவர்தான் குற்றவாளி என்று எண்ணுவது ஒரு சாதாரண மனித மனதின் இயல்பு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோமானால் இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்து யார் மீதும் சினம் எழாமல் காக்கும் அளவுக்கு மன விரிவும் அறிவின் உயர்வும் ஏற்படும்.

No comments:

Post a Comment