Monday, 23 September 2013

முள்ளூர் கிராம சேவைத் திட்டம்

முள்ளூர் கிராம சேவைத் திட்டம் 17-9-13 மாலை 5-30 மணிக்கு உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

முள்ளூர் பஞ்சாயத்து புதுக்கோட்டையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது.

மரக்கன்றுகள் நட்டு, விழா துவங்கியுடன் சுமார் அரை மணி நேரம் கனத்த மழை பெய்ததில் நிகழ்ச்சியை பக்கத்தில் உள்ள  ரைஸ் மில்லில் நடத்தினோம்.

அடாது மழை பெய்தாலும் வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் விழா முடியும்வரை இருந்து சிறப்பித்தனர்.

மனவளக்கலை பற்றிய கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது எடுத்த போட்டோக்கள் சில கீழே - 

விழா துவங்குமுன் தொலைகாட்சி மற்றும் பத்திரிகையாளர்  நேர்காணல் 

மரக்கன்று நடும் மண்டலத் தலைவி 
மழை வரும் முன் விழா மேடையில் 
WCSC  தலைவருக்கு பூங்கொத்து வழங்கும் மண்டலத் தலைவி 
மண்டலத் தலைவியின் வரவேற்புரை 
தலைவர் உரை 
கிராம சேவைத் திட்டத்திற்கு நிதி வழங்கிய ஜானகி வீடியோஸ் திரு வெங்கடாசலம்
இவரின் உதவியால்தான் மனைவி நல வேட்பு நாள் விழா நெட்டில் ஒளி  பரப்பப்பட்டது


இரூர் கிராம சேவைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற காரணமாக இருந்த அ /நி கணேசன் தம்பதியனர் இங்கேயும் தங்கள் சேவையை தொடங்கியுள்ளனர்.

இவர்களுக்குத் துணையாக நின்று இத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற
எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மன்ற அருட் தொண்டர்கள் குறிப்பாக விவசாயத்தில் புரட்சி செய்து வரும் இனிய நண்பர் வழியான்பட்டி கிராமம் அருள்நிதி முத்துகுமரேசன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

அ /நி முத்துகுமரேசன் தன்னுடைய http://mahanvethathiri.blogspot.in    blog ல்
மகரிஷியின் தத்துவங்களை வெளியிட்டு வருகின்றார். முள்ளூர் நிகழ்ச்சியின்
மற்ற போட்டோக்களை இங்கு காணலாம்.

No comments:

Post a Comment