Tuesday, 19 August 2025

பொறுமை ஒரு நல்ல குணமா? ஏன் ?


பொறுமை சில மனிதர்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பான குணம், அது அவர்களுக்கு தரப்பட்டுள்ள வரப்பிரசாதம்,

சகிப்புத்தன்மை, நிதானம், பொறுமை இந்த மூன்றும் ஒன்று கொன்று தொடர்புடையது,

கோபம், துன்பம், அவமரியாதை, உதாசீனம் இவைகளை சகித்து கொண்டு உடலையும், மனதையும் ஆரோக்கியம் கொள்ள செய்வது பொறுமை.

உணர்ச்சி வசபடுதல், இகழ்ச்சிகளை ஜீரணிப்பது, எதிர் விணை ஆற்றாமை, நீண்ட காத்திருத்தல் இவைகளுக்கான சமாதானம் பொறுமை மட்டுமே,

பொறுமை கொள்பவர்களுக்கு - p.p/Sugar தாக்குவது மிக குறைவு.

எனக்கு இரண்டுமே முழுமையாக கிடையாது,

பொறுமையை, கடைபிடிப்பவர்களால் மட்டுமே விரிவாக பொறுமையாக இதற்கான பதிலை சொல்ல முடியும்!! என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!!!

கோபத்தின், எதிரி பொறுமை, கோபத்தினால், பல விபரீத சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன, உணர்ச்சி வசபடுவதினால், பல அவமானங்கள், பல இழப்புகள், பல இடர்பாடுகளை அனுபவிப்பர்கள் உள்ளனர். ஆனால்,

ஒரு போதும் பொறுமை கொள்வதனால், எந்த விபரீதங்களும் ஏற்பட்டு விடாது மாறாக, ஏற்படக்கூடிய பெரும் விபரீதத்தை பொறுமை கொள்வதனால் தடுத்து விட ஒவ்வொருவராலும் முடியும்.

பொறுமை - உடல்நலத்திற்க்கும் மனநலத்திற்கும் மிகவும் நல்லது. பொறுமை இழந்து கத்தும் பொழுது தலைவலி, மன அழுத்தம், அல்சர், போன்ற பிரச்சனைகளுக்கும் வாய்ப்பு இருக்கு,

நிதானமும், பொறுமையை கடைபிடிக்கும் நாபர்களுக்கு, அது வாய்ப்பில்லை என மருத்துவ உலகம் சொல்கிறது.

கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது, பொறுமையால் அதை சாதித்து காட்டலாம்,

பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தார் பூமி ஆள்வார்.

பொறுமையை கடைபிடிப்போம்,

No comments:

Post a Comment