புத்தரின் '24 மணி நேர விதி' தெரியுமா?
குறைந்த பட்சம் 24 மணி நேரம் பொறுமையாக இருங்கள்.
மேனேஜர் கடுமையாக ஏதோ சொல்லி விட்டார். கை பரபரக்கிறது. உடனே வேலையை ரிஸைன் செய்து விட வேண்டும் என்று பரபரக்கிறது. செய்யலாம், 24 மணி நேரம் பொறு.
வாழ்க்கைத்துணை ஏதோ சொல்லக் கூடாத வார்த்தையை சொல்லி விட்டார். அவ்வளவு தான், pack செய், விவாகரத்துக்கு எந்த வக்கீலைப் பார்க்கலாம்?, சரி பார்க்கலாம், ஆனால் 24 மணி நேரம் பொறு.
மேல் வீட்டுக்காரர் அவமானப் படுத்தி விட்டார், விட்டேனா பார், இப்போதே போய் கதவைத் தட்டி, நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி அசிங்கமாக நாலு கேள்வி கேட்டு விடப் போகிறேன் பார், கேட்கலாம், பொறு ஒரு 24 மணி நேரம்.
24 மணிநேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேனேஜரோ, வாழ்க்கைத் துணையோ, மேல் வீட்டுக் காரரோ ஒருவேளை உங்களிடம் மன்னிப்புக் கோரலாம். பொறுமை தான் நமது ஆயுதம். நம் பொறுமை அவர்களை உறுத்தும். எதிர்வினை ஆற்றிவிட்டால் நம் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுவோம்.
24 மணிநேரத்தில் உலகமே தலைகீழாகப் புரண்டு விடும்.
அவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் கூட நம் மனநிலை மாறிவிட வாய்ப்புகள் அதிகம். 'சரிதான் விடு, இதெல்லாம் ஒன்றுமே இல்லை, மறப்போம், மன்னிப்போம்' என்ற மனநிலை கூட நமக்கு வந்து விடலாம்.
குறைந்த பட்சம் 24 மணிநேரம் பொறுமையாக இரு!

No comments:
Post a Comment