ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி நிற்குமாம் கொக்கு!
பொறுத்தார் பூமியாள்வார்
காலம் கண் போன்றது
பொறுமை பொன் போன்றது
இது போன்ற பொன் மொழிகள் மூலம் நாம் பொறுமையின் பெருமையை அறியலாம்.
எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றிருப்பதை விட ஆற அமர சிந்தித்து செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒரு சிறிய கதை!
ஒரு ஊரில் பஞ்சம் தலை விரித்து ஆடியது. உண்ண உணவின்றி தவித்தனர்.
கையில் பணமோ பொருளோ இல்லாமல் மக்கள் தவித்தனர்.
அந்த ஊரில் உள்ள ஒரு செல்வந்தர் தன் மாளிகையில் தன் வேலையாட்களைக் கொண்டு ஊரில் உள்ள அனைவரும் சாப்பிடும் வகையில் அன்றாடம் ரொட்டி சுட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
மக்கள் அடிதடி சண்டை போட்டு ரொட்டியை வாங்கி சென்றனர். ஒரே ஒரு சிறுமி மட்டுமே பொறுத்திருந்து கடைசியில் மீந்து உடைந்து சிதைந்த ரொட்டித் துண்டுகளை தம்முடைய இயலாத பெற்றோருக்கு வாங்கிச்சென்றாள்.
இது தினமும் தொடர்ந்தது. சிறுமியே கடைசி ஆள்.
ஒரு நாள் காலையில் அந்த செல்வந்தர் உணவுக் கூடையில் ஐந்து பொற்காசுகளை வைத்தார். வழக்கம் போல் அடிதடி, சண்டை ,உணவு விநியோகம் முடிந்தது. கடைசியில் சிதைந்த ரொட்டித்துண்டுகளுடன் பொற்காசுகளும் அந்த சிறுமிக்குப் போய் சேர்ந்தது.
சிறிது நேரத்தில் அந்த பெண் காசுகளுடன் அந்த முதலாளியிடம் வந்து திருப்பி செலுத்த வர அவர் அதை அவள் பொறுமைக்கு கிடைத்த பரிசு என்று அந்தப்பெண்ணுக்கே பரிசளித்தார்.
பொறுமையின் பெருமை புரிகிறதா?

No comments:
Post a Comment