வாழ்க்கையில் பொறுமை இன்றி பல முக்கிய விடயங்களை நிகிழ்த்திட முடியாது.
உதாரணமாக முதல் முறையாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கற்கும் போது பொறுமையாக படிப்படியாக தான் கற்க முடியும். ஒரேயடியாக வண்டியின் ஆக்ஸிலரேட்டரை திருகினால் மல்லாந்து விழ நேரிடும். அதே போல் தான் வாழக்கையிலும்.
சரியான நேரத்தில் பொறுமையை கடைபிடிக்காவிடில் செல்வம், உறவுகள், உணர்வுகள் போன்ற பலவற்றை இழக்க நேரிடும்.
பொறுமை அவசியமாகும் சில முக்கிய சமயங்கள்:
- நினைத்தவைகள் உடனே நடக்காத போது.
- சூல்நிலைகள் நமக்கு எதிராக திரும்பும் போது.
- ஆசையின் பிடியில் தவறிழைக்க மனம் ஆவல் கொள்ளும் போது.
- கோபத்தின் உச்சியில் ஊசியென வாரத்தைகள் வெளிவர காத்திருக்கும் போது.
இது போன்ற நேரங்களில் பொறுமையைக் கடைபிடித்தால் பல சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.

No comments:
Post a Comment