எத்தனை வயசானாலும் பார்க்க இளமையா தெரியத் தான் எல்லோருமே ஆசைப்படுவாங்க. ஆனாலும் முப்பத்தைந்தைத் தாண்டினாலே மெல்ல நரைமுடி எட்டிப்பார்க்க ஆரம்பிக்கிறதே? அதைக் கூட மருதாணியும், அவுரியும் போட்டு இயற்கைக் கலருக்கு கொண்டு வந்திடலாம். ஆனால் நாற்பதில் தோன்ற ஆரம்பிக்கும் முகச் சுருக்கம், கண்கள் ஓரத்தில் சுருக்கம், சிரிக்கும்போது வாயோரத்தில் விழும் கோடுகள், கைகளில் தோன்றும் கோடுகள், சுருக்கங்கள் எல்லாம் நம் வயதைக் காட்டிக் கொடுக்குதே! எத்தனை ஆயிரம் கொடுத்து பேஷியல் செய்து என்ன பயன் என்ற வருத்தம் வரத்தான் செய்யும்.
வயதாகும் போது உடலில் சுருக்கங்கள் ஏன் தோன்றுகின்றன தெரியுமா?
நமது உடலில் இயற்கையாகவே சுரக்கக்கூடிய ஒரு வகைப் புரதத்தின் பெயர் கொலாஜன். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
நமது சரும எடையில் 75 சதவீதத்தை ஆக்கிரமித்து இளமையும் சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையும், மென்மையும் அளிக்கிறது. அதனால் தான் குழந்தைகளின் சருமம் பட்டுப் போல மிருதுவாக இருக்கிறது. ஆனால் வயதாக வயதாக உடலில் கொலாஜன் சுரப்பு குறைந்து, எலும்புகள், தசை நார்கள் திசுக்களுக்குத் தேவையான கொலாஜன் அளவு குறையும் போது நமது சருமம் சுருக்கங்களுடன் வயதான தோற்றத்தைப் பெறுகிறது.
சிலர் வயதான தோற்றத்தை மறைக்க கொலாஜன் சப்ளிமென்ட் மாத்திரைகள் எடுக்கிறார்கள். அதனால் உடலுக்கு பக்க விளைவுகள் தோன்றும்.
அப்போ என்ன செய்யலாம்?
இயற்கையின் கொடையான சீதாப்பழம் நம் சருமத்தை இளமையோடு வைத்திருக்கிறது. சீதாப்பழம் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுக்கிறது.இதில் உள்ள சத்துக்கள் கொலாஜனின் முறிவை தாமதமாக்கி, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் சுருக்கங்கள், முதுமையை, மூப்பு சம்பந்தமான அறிகுறிகள் தாமதமாவதை உறுதி செய்கின்றன. மேலும் சரும செல்கள் மீளுருவாக்கம் செய்வதற்கும் இது உதவுகிறது. அடிக்கடி சீதாப்பழம் சாப்பிடுபவர்களின் சருமம் எப்போதும் இளமையாக இருக்கிறது.
சீதாப்பழத்தின் இதர பயன்கள்; இது நீரிழிவு நோயை தடுக்கிறது. இதிலுள்ள ஒமேகா 3 மனநிலை மாற்றங்களைசீர்படுத்துகிறது. சோர்வு நீக்கி சுறுசுறுப்பைவழங்கிநினைவாற்றலை அதிகரிக்கின்றது.குடல் அமைப்பை மேம்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கண்பார்வை மேம்பாடு, மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராட உடலுக்கு சக்தி அளிக்கிறது.
இத்தனை நன்மைகளை அள்ளித்தரும் சீதாப்பழத்தை அடிக்கடி உண்டு பயன் பெறுவோம்.
நன்றி - கல்கி
No comments:
Post a Comment