Saturday, 31 March 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 4

ஸ்ரீராமநவமி

அப்பாவுக்கு இஷ்ட தெய்வம் ராமர். அப்புறம் அனுமார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராம ஜபம் பண்ணுவாங்க..
கோடி முறைக்கு மேல ஜபம் சொல்லியிருக்காங்க.. அப்புறம் ஸ்ரீராமஜெயம் எழுதுவாங்க.. கோடி
தடவ எழுதுனும்ன்னு ஆசப் பட்டாங்க.. கிட்டத்தட்ட 85 லட்சம் தடவ எழுதியிருப்பாங்க. தெனம் சுந்தர காண்டம் படிப்பாங்க.. ராமாயணத்துல சுந்தர காண்டம் முக்கியமானது..அதுல ஹீரோ அனுமாரு.. மொத்தம் 68 சர்கத்த ( அப்பாவோட குரு சொல்லிகொடுத்த முறைப் படி ) படிப்பாங்க. அந்த particular முறையில படிக்கறச்ச மூணு மாசத்துக்கு ஒரு தடவ கடைசி chapter ல சரியா முடியும். அன்னிக்கு வீட்ல ரொம்ப கிராண்டா படையல் போடுவாங்க...வீட்ல இருக்குற மூணு அனுமார் படத்துக்கும் நெய்ல வடை சுட்டு மாலையா போடுவாங்க..அப்புறம் 108 நெய் விளக்கு வைப்பாங்க..எல்லா சாமி படத்துக்கும் மாலைப் போட்டு பூஜ பண்ணி படைப்பாங்க..
அம்மாவும் கோடி முறைக்கு மேல ராமஜெபம் சொல்லியிருக்காங்க..ஊர்ல யாருக்கு ஒடம்பு சரியில்லேன்னாலும், பிரச்சனன்னாலும் அவங்களுக்க்காகவும் ஜபம் பண்ணுவாங்க படையல் நடக்கும்போதெல்லாம் அலுத்துக்காம, தூங்காம எல்லா வேலையும் பாப்பாங்க. ( இந்த நெய் வடை ரொம்ப நாளக்கி இருக்கும். அம்மா எனக்காக ஒரு பாத்திரத்துல எடுத்து வச்சுருப்பாங்க..)
ராமர் பொறந்த நவமி பங்குனி மாசம் வரும்போது ஸ்பெசல் படையல் நடக்கும்.
பானகம், நீர்மோரு, வடை, சுண்டல்ன்னு படைச்சு மத்தியான நேரத்துல வெய்யில்ல தெருவுல போறவங்களுக்கெல்லாம் விநியோகம் நடக்கும். ஸ்ரீராமநவமி பொதுவா பரீச்ச எல்லாம் முடிஞ்சு லீவு நாள்ல
வர்றதால வீட்லேயும் பசங்க கூட்டம் அதிகமா இருக்கும்..
அப்புறம் நாங்க கட்டாயம் ஸ்ரீராமஜெயம் எழுதுணும்..ஜபம் பண்ணனும்..
அப்பா, அம்மா செஞ்ச பூஜாபலன் எங்கள நல்லா வச்சுருக்கு..
இப்ப எங்க வீட்ல மூணு " ராமர்" கள் இருக்காங்க..
சுந்தரராமன்
சிவராமன்
ஸ்ரீராம்
இன்னிக்கி ஸ்ரீராமநவமி.. இந்த நல்ல நாள்ல எல்லாரும் மகிழ்ச்சியா, நிம்மதியா எல்லா வளமும் பெற்று நிறைவா வாழ அப்பா, அம்மா நினைவோட வேண்டுகிறேன்!
வாழ்க வளமுடன்!



APRIL FOOL

நாளக்கி ஏப்ரல் ஒண்ணாம் தேதி.. முட்டாள்கள் தினம்..
மத்த நாள்ல நாம எப்படி இருக்குறோம்ன்னு ஞாபகப் படுத்திக்க வைக்கிற நாள்.
ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாள் தினமா மாறுன வரலாறு சொல்லப் போறேன்......ஓடிடாதீங்க..
நம்மூர்ல சித்தர மாசம் வருசப் பொறப்பு கொண்டாடுற மாதிரி ஒலகத்துல பல நாட்ல ஏப்ரல் முத தேதிய வருச பொறப்பா கொண்டாடுனாங்க..
கிரிகோரி போப் 1582 ல காலண்டர சீர்திருத்தி புதுசா காலண்டர் போட்டாரு..அதுல ஜனவரி ஒண்ணாந் தேதிதான் ஒவ்வொரு வருசத்தோட மொத நாளுன்னு சொல்லிட்டாரு..பிரான்ஸ் இன்னும் சில நாடுகள் உடனே இதை follow பண்ண ஆரம்பிச்சுடுச்சு...
இப்ப இருக்குற கம்யூனிகேசன் அப்ப இல்லாததால பல நாட்ல பழையபடி ஏப்ரல் ஒண்ண புத்தாண்டு தினமா கொண்டாடிக்கிட்டுருந்தாங்க..புது காலண்டரு வச்சுக்கிட்டுருந்தவங்க இவங்களப் பாத்து கேலி, கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க..இவங்கள முட்டாளாப் பாத்தாங்க..
இப்படிதான் ஏப்ரல் ஒண்ணாம்தேதி முட்டாள் தினமா வந்துச்சி..அப்புறம் இந்த தேதியில மத்தவங்கள ஏமாத்தி வேடிக்க பாக்கறதும் வழக்கமாச்சு..

கீழ இருக்குற ஜோக்குல இருக்குற தத்துவத்தைப் புரிஞ்சிக்காதவங்க
ஏப்ரல் ஃபூல்!

நம்ம சர்தாரு அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.அதனாலே தங்கிட்டு காலேல போ..சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்துகொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டேதிரும்பினார்..நண்பர் கேட்டார்.." எங்கே நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?' சர்தாரு சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!







BHEL அறிவுத் திருக்கோவில் - 2





உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் அறிவுத் திருக் கோவில் பூமிக்கு
வந்தபோது எடுத்த படங்கள் ( 2005 )


வேதாத்திரி நகர் நெலம் மொத்தம் அஞ்சு ஏக்கரு.. அத 54 ப்ளாட்டாப் போட்டு
அதுல ஒரு ஏக்கர் அறிவுத் திருக்கோவில் வளாகமா ஒதுக்குனோம்.
மத்த இடத்த தொண்டு செய்ய ஆர்வமா உள்ள மன்ற அன்பர்கள் எடுத்துகிட்டோம்..
மகரிஷிகிட்ட layout ஐ காட்டி கோவில் வர்ற இடத்துல அவரோட கையெழுத்த வாங்குனோம்..அப்ப அவரு .. " நீங்க கட்டப் போற இந்த கோவிலுக்கு நா ஒரு லட்சம் தாரேன் " ன்னு சொன்னாரு..நாங்க என்ன முடிவு பண்ணுனோம்னா -
" நாமதான் குரு காணிக்க தருணுமே தவிர அவர்கிட்ட பொருள் வாங்கக் கூடாது.. அருள் ஒன்றே போதும். கோவில் திறப்பு விழாவுக்கு கூப்பிடும்போது அவர் சொன்ன ஒரு லட்சத்தை குரு காணிக்கையா வச்சு அழைக்குணும் " ன்னு வந்துட்டோம். இருந்தாலும் குரு கையால ஒரே ஒரு ரூபா வாங்கி நிதி திரட்ட ஆரம்பிக்க ஆசப் பட்டோம்.

மகரிஷிக்கு இந்த தகவலைச் சொல்லி அவங்ககிட்ட ஒரு ரூபா வாங்க பத்து பேர் போனோம். அவரு தரப்போற காசை வைக்க ஒரு வெள்ளிப் பேழை வாங்குனோம். அவரு ஒரு ரூபாவுக்கு பதிலா அஞ்சு ரூபா காசைக் கொடுத்துட்டு " சந்தோசம்தானே" ன்னாரு..
அப்ப அவருக்கு நன்றி சொல்லிட்டு நா சொன்னேன் - " சாமி.. ஒங்ககிட்ட ஒரு ரூபா வாங்கி ஒரு கோடியில கோவில் கட்ட ப்ளான் போட்டேன். நீங்க அஞ்சு ரூபா கொடுத்ததால எங்க ப்ளானை அஞ்சு கோடிக்கு மாத்திட்டேன்!" ( நிஜமாகவே இன்று நாங்க கட்டியிருக்கும் BHEL அறிவுத் திருக்கோவில் மொத்த மதிப்பு அஞ்சு கோடிக்கு மேல..)


சாமி சிரிச்சுகிட்டே " நீங்க முதல்ல அடிக்கல் நாட்டுங்க.. உங்க பூமி தனக்குத் தேவையானத வாங்கிக்கும்.. உங்க புண்ணிய பூமியில கால் வைக்கிறவங்க அங்க வேலையும் செஞ்சு கொடுத்திட்டு நிதியும் கொடுப்பாங்க" ன்னு
வாழ்த்துனாங்க,,


" சாமி, நீங்கதான் அடிக்கல் நாட்டு விழாவிற்கும், கோவில் திறப்பு விழாவிற்கும் வந்து உங்க பொற்கரத்தால துவக்கி வைக்கணும்" ன்னு கேட்டதுக்கு சாமி உடனே " வந்துட்டாப் போச்சு!" ன்னு சொல்லி எங்கள சந்தோசப் படுத்துனாரு..

சாமி ஆசீர்வத்திதது மாதிரி பன்னாட்டு மையமா நம்ம கோவில் வரணும்ன்னு
பெஸ்ட் ஆர்க்கிடெக்டா தேடுனோம்.. தலைவர் SKM மயிலானந்தத்தின் அறிவுரை பேரில் Horizon Arcitects ஐ ஒப்பந்தம் செய்து கோவில் டிசைனை ஆரம்பிச்சோம். அடிக்கல் நாட்ட தேதி குறிச்சோம்.
வேதாத்திரி நகர்ல வீடு கட்டுறவங்க முழு நேர தொண்டுல வாழப் போறதால அவங்க வீட்ல கிச்சன், ஸ்டோர் ரூம் தேவையில்ல.. common கிச்சன் வச்சுக்கலாம்ன்னு திட்டங்கள் தீட்டிக்கிட்டுருந்தப்ப...


வந்த சேதி எங்கள நிலைகுலைய வச்சுடுச்சு,,

தொடரும்...









Friday, 30 March 2012

WEEKEND WISDOM


திருக்குறளு ஒரு ஞானநூலு..

லைஃபுக்கு தேவையா கொறள் சொல்ல வந்தா
நம்ம பசங்க வுட மாட்டேங்கிறானுங்கோ
இன்பத்து பலான குறளுக்கு விளக்கம் கேக்குறானுங்கோ..
அவங்க ஆசைக்கா ஒண்ணு...


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விளக்கம்

வளைய அணிஞ்ச பொண்ணோட மஜா பண்ணச்ச அவளோட கச்சு, பேச்சு, மூச்சு, டச்சு & இச்சு அல்லாமே புச்சு ( புதுசு )...
அஞ்சு ஃபீலிங்ஸும் ஒண்ணா எஞ்சாய் பண்லாம்....மச்சான்!

நம்ம புள்ள ஒண்ணு காமத்துக்கும் ஞானத்துக்கும் இன்னா சம்மந்தம்ன்னு கேட்டுச்சு..
ஞானம்ன்றது எல்லா மேட்டர்லேயும் பிஸ்தாவா இருக்கறது..
அதுல ஒரு மேட்டர்தான் காமம்.... கண்ணு...













Thursday, 29 March 2012

எறும்பும் யானையும்

சிறு உருவம் கொண்ட எறும்பு முதல் பெரிய உரு கொண்ட யானை வரை
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இறைவனை வழிபட்டதாக
தமிழ்நாடெங்கும் பலப்பல கோவில்கள் உள்ளன, திருச்சியில் எறும்பு வழிபட்ட திருவெறும்பூர்
கோவிலும் யானை வழிபட்ட திருவானைக்காவல் கோவிலும் உள்ளன..
( மனிதன் மனிதனாக வாழ, தன்னில் உறையும் இறைவனை உணர நாங்கள் எழுப்பிய
அறிவுத் திருக்கோவிலும் இங்குதான் உள்ளது..)

திருவெறும்பூர்

1500 வருசத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட மலைக் கோயில்.. தேவர்கள் எறும்பு வடிவில் இறைவனை வழிபட்டதாக தல வரலாறு..சிவலிங்கம் எறும்பு புற்றினால் ஆனது.. எனவே அபிஷேகம் கிடையாது. அப்பர் இந்த கோவிலுக்கு வந்து தேவாரம் பாடியிருக்கார்.
ராபர்ட் கிளைவ் இந்த கோயிலில் தன படைகளோட தங்கியிருந்து பிரெஞ்சுகாரங்களோட சண்டைப் போட்டு அவங்களை விரட்டி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் காலூன்ற வைத்தான். சரித்திரத்தில் இடம் பெற்ற ஊர்.
திருவானைக்காவல்

இந்த ஊர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று.. அம்பாள் தண்ணியையே லிங்கமாப் பண்ணி வழி பட்டதா கதை.!
பெரிய்ய கோவில்! அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தம்..
சிவலிங்கம் தண்ணீரில் இருக்கும்..
யானையும், சிலந்தியும் வழிபட்டதாக கதை..

தெனம் யானை காவிரியிலிருந்து தும்பிச்சி கைல தண்ணி புடிச்சி
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணும்.. சிலந்தி லிங்கத்துக்கு மேல
வலை பின்னி சாமி மேல ஒண்ணும் விழாமப் பாத்துக்கும்.
யானை அபிஷேகம் பண்ணும்போது வலை வீணாப் போயிடும்..
இதனால சிலந்திக்கு கோபம் வந்து யானையோட தும்பிக்கைல பூந்துக்கிட்டு
யானையைக் கொன்னுடிச்சு.. சிலந்தியும் செத்துப் போச்சு..சாமி ரெண்டுத்துக்கும்
வரம் கொடுத்தாரு.. யானைக்கு ஸ்ட்ரைட்டா சொர்க்கம்..! சிலந்தி கோபப்பட்டதால
அது சோழ மன்னனாப் பொறந்து இந்த கோவிலைக் கட்டிச்சு..
யானை சாமிகிட்ட வராதபடி சின்ன வாச வச்சி பழி தீத்துகிச்சு..
( சிலந்திதான் சோழன் கோச்செங்கண்ணான் மன்னனாகப் பிறந்து சிவனுக்குப் பல கோவில்கள் கட்டியதாக
சொல்லுவார்கள். இவன் கட்டிய எல்லா கோவிலிலும் சாமி சன்னதிக்கு யானை வரமுடியாதபடி சிறிய வாசல் இருக்கும் )




BHEL அறிவுத்திருக்கோவில்











Wednesday, 28 March 2012

BHEL அறிவுத் திருக்கோவில் - 1












2004 லில் வேதாத்திரி நகர்



















வேதாத்திரி தவச் சாலை














மகரிஷி நினைவு நாளான இன்று  அவரைப் பற்றியேஎண்ணிக்கொண்டிருந்தேன்.. மாலா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளஆழியாறு சென்றுவிட்டாள். மலரும் நினைவுகளில் சிலவற்றைத்தொடர்ந்து இங்கு தர இருக்கின்றேன்..


BHEL அறிவுத் திருக்கோவில் உருவான வரலாறு


1997 ம் ஆண்டு மகரிஷி இங்கு வந்தபோது மூன்று நாட்கள்தங்கியிருந்தார்கள். நாங்கள் நடத்திய காந்தத் தத்துவக் கருத்தரங்குமகரிஷிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது..அப்போது அவர்கள் " நீங்கள் அமைக்கப் போகும் அறிவுத் திருக்கோவில்பன்னாட்டு மையமாகத் திகழப் போகிறது.. உலகின் பல பாகங்களிலிருந்தும்அறிஞர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுவார்கள் " என்று வாழ்த்தினார்கள்.




அதுவரை நாங்கள் அறிவுத் திருக் கோவிலைப் பற்றி எண்ணவே இல்லை..மகரிஷி போட்ட விதை 2004 ம் ஆண்டு முளைக்க ஆரம்பித்தது..பல இடங்களில்இக்கோவிலுக்காக இடம் தேடி அலைந்தது ஒரு பெரிய கதை..கடைசியாக திருச்சி - தஞ்சை சாலையில்எல்லோரும் வந்து போகும்படியான இடத்தை தேர்வு செய்து வேதாத்திரி நகர் உருவாக்கினோம்.


அங்கு முதலில் வேதாத்திரி தவக் குடில் துவங்கினோம்..


தொடர்ச்சி அவ்வப்போது வரும்..

MIDWEEK INSPIRATION


திருக்குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

விளக்கம்

அறிஞருங்க கும்பல்ல எப்பவுமே அடக்கி வாசி அண்ணாத்தே..உதார் வுட்டேன்னு வச்சுக்க..நாஸ்தி பண்ணிடுவானுங்க..நீ ஷேமா மூஞ்சியை தொங்க போட்டுக்கணும்....கபர்தார்!

பிரம்ம ஞானம்

எல்லோரும் இறைநிலை உணர்ந்து, இறைநிலை அடையலாம் என
எளிமையாக பிரம்மஞான பயிற்சி தந்த மகரிஷி அவர்களின் நினைவு தினம் ( 28 மார்ச் ).

விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் இணைத்து உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில்
எளிய உடல் மற்றும் மனப் பயிற்சிகளை வடிவமைத்த ஒப்பற்ற மகானாகிய
அவருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கும், மாலாவுக்கும் கிடைத்தது எங்கள் பெற்றோர்கள், மூதாதையர்கள் செய்த நல்வினைப் பயன்கள்தான்!

இன்று அவருடைய மனவளக்கலை " மனித மாண்புக்கு மனவளக்கலை யோகா"
என்ற தலைப்பிலே பாடங்களாக பள்ளியிலே, கல்லூரிகளிலே சொல்லித்தர படுகின்றது.. பட்டப் படிப்பு, முதுகலைப் படிப்பு, MPhil என பல பல்கலைக்கழகங்கள் வகுப்புகள் நடத்துகின்றன. இவருடைய தத்துவத்தை நிறைய பேர் PhD பதிவு செய்து ஆராய்ந்து வருகிறார்கள்.

அவருடைய மறைவுக்கு ஒரு மாதம் முன் நாற்பது பேராசிரியர்களை அழைத்து " இனி எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். மனவளக்கலையால்தான் உலக அமைதி வரும் " என்று சொல்லி எங்களைப் பார்த்து கைகூப்பியபோது நாங்கள் நெகிழ்ந்து அழுது விட்டோம். மாலாவைப் பார்த்து " ஸ்ரீலங்காவுக்கு கூப்பிட்டா மறுக்காமப் போய் வாம்மா.." என்று தனிப்பட கூறியதும் மறக்க முடியாது..
( மாலா ஆறு முறை ஸ்ரீலங்கா சென்று பயிற்சி கொடுத்திருக்கிறாள் )
ஸ்ரீராம் TCS சேருமுன் ஆழியாரில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி மகரிஷியின்
அன்புக்கு பாத்திரமானதும் கிடைத்தற்கரிய பேறு..!

வேதாத்திரிய வேள்வி தினமாகிய இன்று உலக அமைதிக்கான தொண்டில் எங்களை மீண்டும், மீண்டும்
அர்ப்பணித்துகொண்டு கடமைகளைத் தொடர்கின்றோம்..!
வாழ்க மகரிஷி புகழ்! வாழ்க வேதாத்திரியம்!






Tuesday, 27 March 2012

கர்ணன்



சிவாஜி நடிச்ச இந்த படம் மறுபடியும் ரிலீஸ் ஆயிருக்கு..நல்ல ரெஸ்பான்ஸ்..
எனக்கு புடிச்ச நடிகர் எனக்கு புடிச்ச புராண கேரக்டரா நடிச்ச படம்..
18 அத்தியாய கீதையை கண்ணதாசன் சிம்பிளா சொல்லிட்டாரு..
சீர்காழி கோவிந்தராஜன் குரல்ல இப்பவும் இது ஹிட்தான்..

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா

மரணத்தின் தன்மை சொல்வேன்

மானிடர் ஆன்மா மரணமெய்தாது

மறுபடிப் பிறந்திருக்கும்

மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்

வீரத்தில் அதுவும் ஒன்று

நீவிட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்.... ஆ..


என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்கண்ணன் மனது கல்மனதென்றோ

காண்டீபம் நழுவவிட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய்..

மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே..

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்

துணிந்து நில் தர்மம் வாழ புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே..

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..

கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்..

காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!


பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே


இளைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

கல்லணை











திருச்சி மலைக்கோட்டை பாறைகள் உலகத்துலேயே மிக பழமையானவை என்பது போல உலகத்தின் மிக பழமையான அணை இங்கிருக்கும் கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டு இன்றும் பயன் பட்டுக்கொண்டிருக்கும் அணை.
இங்க BHEL ல்லிருந்து பத்தே கி.மீ. தூரம்தான்.
உலகத்தின் முதல் அணை என்று கூட சொல்லலாம்.
மண்ணை அடித்தளமாக வைத்து வெறும் செங்கற்களாலும், களிமண்ணாலும் கட்டப்பட்டது.
இந்த தொழில்நுட்பம் இன்னும் இன்றைய experts களுக்கு புடிபடவில்லை.
பிரிட்டிஷார் இதை Grand அணைக்கட்டு என்றழைத்தனர்.
நீர்ப் பாசனத்துறையில் தமிழர்களே உலகுக்கு முன்னோடி என பெருமை கொள்ளலாம்.
இந்த அற்புத அணையைக் காண அழைக்கின்றேன்,, வருக..வருக..




Monday, 26 March 2012

குதம்பைச் சித்தர்


உலகத்துலேயே முதல்முத ரசாயன விஞ்ஞானம் கண்டுபிடிச்சவங்க நம்ம தமிழ்நாட்டு சித்தர்கள்தான்..
வானியல், மூலிகை, மந்திரம், மருத்துவம், ரசவாதம் இப்டீன்னு ஏகப்பட்ட விசயங்கள மக்களுக்கு கொடுத்தவங்க இவங்கதான்..
உலக சரித்திரம் தமிழ்நாட்டைப் பத்தி அதிகமா சொல்லலே..
அதனால உலகத்துல நெறைய பேருக்கு சித்தர்கள் சமுதாயத்துக்கு செஞ்ச தொண்டு பத்தி தெரியல..
7 ம் அறிவு படம் வந்தப்புறம்தான் போதிதர்மர் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கே தெரிஞ்சுது..
இந்த சித்தர்கள் பல்வேறு காலகட்டங்கள்ல வாழ்ந்திருந்தாலும் 18 பேர்கள்
குறிப்பிடப்பட வேண்டியவர்கள்..
இந்த 18 பேர் லிஸ்ட்ல மாயரத்துல ஜீவசமாதி அடைஞ்ச குதம்பைச் சித்தரும் ஒருவர்.
இவரு ஒரு பெண் சித்தர்ன்னு சொல்றவங்க இருக்காங்க..
இவரு காதுல பொம்பளைங்க போட்டுக்கற குதம்பை நகையை
அணிந்திருந்ததால குதம்பைச் சித்தர்ன்னு பேரு வந்துச்சுன்னு
சொல்றவங்களும் இருக்காங்க..
இவரு மொத்தமே 32 பாட்டுதான் எழுதியிருக்காருன்னு சொல்றாங்க..

" மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போருக்கு
தேங்காய்ப் பாலேதுக்கடி, குதம்பாய்
தேங்காய்ப் பால் எதுக்கடி? "
எல்லாருக்கும் தெரிஞ்ச இதுக்கு அர்த்தம் யோசிச்சுப் பாருங்க..

மகரிஷிகிட்ட இவரப் பத்தி பேசினப்ப அவரு புதுசா ஒரு கருத்து சொன்னாரு..
காயகல்ப பயிற்சியில "அசுவனி முத்திரை"ன்னு ஆசனவாய் தசைகளை
சுருக்கி, விரிக்கும் நரம்பூக்கப் பயிற்சி தெரிஞ்சிருக்கும்.
குதத்தைச் ( ஆசனவாயை ) சுற்றியுள்ள தசைகள் உடலியக்கத்திற்கு துணை நிற்பவை. நரம்புகளுக்கு ஊக்கம் கொடுப்பவை. டாக்டர்கள் Sphincter muscles என்பார்கள்.
இந்த தசைகளின் பெருமையை உணர்ந்த சித்தர் குதத்தை பெண்பாலாக உருவகித்து பாடிய பாடல்கள்தான் இந்த 32 பாடல்கள் என்றார்.

மக்களுக்கு வேண்டிய ஞானக் கருத்துகளை
குதம்பை என்ற பெண்ணுக்குச் சொன்னதாக எடுத்துக்கலாம்.

மாயரத்துல இருக்குற இவருடைய ஜீவசமாதிய நான் இன்னும் போய் பாக்கல..!

சிட்டுக்குருவி



சிட்டுக்குருவி...
சேதி தெரியுமா?





இங்க தோட்டத்துல நெறைய பறவைங்க வருது..
தெனம் ஒரு bowl ல்ல தண்ணியும், சில தானியங்களையும்
தூவி வைப்பேன். அத சாப்பிட கல்குருவி, மைனா, காக்கா, புறா, கருப்புக்குருவி,
நாகணவாய், மரங்கொத்தி சில சமயம் மீன்கொத்தி இன்னும் சில
புது பறவைகல்லாம் வருது. மயிலும் வருது..ஆனா சிட்டுக்குருவி
மாத்திரம் கண்ணுலேயே படல..


மார்ச் 20 ம் தேதி சிட்டுக்குருவி தினம் கொண்டாடுனாங்க..
கண்ணுக்கேதிரேயே அழிந்து போய் கொண்டிருக்கும் இந்த இனத்தைக்
காப்பாற்ற முயற்சிகள் எடுத்துக்கிட்டுருக்காங்க..

மாயரத்துல அறுவட சமயத்துல நெற்கதிர்கள கொத்தாக வீட்டு வாசல்ல
கட்டித் தொங்க விட்டுருப்பாங்க..ரெண்டு மாசத்துக்கு சிட்டுக்குருவிங்க
அந்த நெல்மணிகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்..வீட்டு கூரையில கூடு
கட்டி வாழும். இப்ப வீடுகல்லாம் மாறிப்போச்சு..

பத்து வருசத்துக்கு முன்ன பொகாரோ ஸ்டீல் பிளாண்ட் போயிருந்தேன். அந்த ஊருல டெலிபோன் கம்பிங்க மேல வருசையா சிட்டுக்குருவிங்க ரெண்டு,மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு உட்காந்திருந்தது. ஆயிரக்கணக்குல சிட்டுக்குருவிங்கள அங்க பாத்தேன்.
இப்ப அங்க நெலம எப்படி இருக்குன்னு தெரியல..

( எங்க வீட்டு காக்கா முற்றத்தைப் பத்தி சீக்கிரம் ஒரு post போடப்போறேன் )

Sunday, 25 March 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 3


திருக்கூட்டம்
ஒரே நேரத்துல எரநூறு முந்நூறு விதவிதமான சாமியார்கள் தெரு முழுக்க வீட்டு வாசல்ல பாத்தா எப்படி இருக்கும்? இந்த சம்பவம்ஒவ்வொரு மார்கழி மாசமும் ஒருநாள் நடக்கும்..
திருவண்ணாமலையில பெரிய கார்த்திகையின்போது நாட்டின் பல்வேறு பகுதியிலேருந்து வந்து சேரும் சாமியார்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து கால்நடையாக பழனி நோக்கி புறப்படுவார்கள்.
இந்தக் கூட்டம்தான் திருக்கூட்டம் - இதுக்கு ஒரு தலைமை சாமியார் இருப்பார். விதவிதமான வாத்தியக் கருவிகளுடன் எக்காளம் ஊதிக்கொண்டு இந்தக் கூட்டம் தேவார, திருவாசகப் பாடல்கள் பாடிக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஓரிரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்துவார்கள். தைப்பூசத்தன்று பழனியில் இருக்கும்படி திட்டமிட்டு நடந்து வருவார்கள். ஒவ்வொரு ஊர்லேயும் செல்வந்தர் ஒருவர் இவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து பூஜை ஏற்பாடு செய்வார்கள்.
மாயரத்துல கொட்டாச்சி வீட்ல இவங்களுக்கான பூஜை, விருந்து ஏற்பாடு செய்வாங்க. சாயந்திர நேரத்துல ஒவ்வொரு சாமியாரா வந்து சேருவாங்க.. எங்க வீட்டு வாச திண்ணையில மாத்திரம் 30 , 40 சாமியாருங்க தங்கியிருப்பாங்க. ஜடாமுடி சாமியார், நீட்டு நக சாமியார், புலித்தோல் அணிந்த சாமியார், மொட்டை சாமியார்,கண்ணாடி சாமியார் இப்படி பலரக சாமியார்கள்....சிலரை பாக்கவே பயமா இருக்கும். வழக்கமா வர்ற சாமியாருங்க வீட்டுக்குள்ள தங்குவாங்க.. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டுருப்பாங்க.
அடுத்த நா காலையில எல்லா சாமிக்கும் கொட்டாச்சி வீட்ல எண்ணை, சீயக்காய் கொடுப்பாங்க.. எல்லா சாமியாருங்களும் காவேரிக்குப் போயிஆயில் பாத் எடுத்துக்கிட்டு வருவாங்க..அப்புறம் ரெண்டு மணி நேரம் கொட்டாச்சி வீட்ல பூஜை நடக்கும். அப்புறம் அவங்களுக்கு பிரமாதமான சாப்பாடு போடுவாங்க. மாயரத்துல இருக்குற மத்தவங்களுக்கும் அன்னதானம் நடக்கும்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு குத்தாலம் கிளம்புவாங்க..
இப்பல்லாம் திருக்கூட்டம் வருதான்னு தெரியல.. தெருவிலேயும் திண்ணைகளே இல்ல..
ஒண்ணுரெண்டு விஷயங்கள் ஞாபகம் இருக்கு -
ஒரு சாமியார் அப்பாகிட்ட புது வேட்டி வாங்கி ஒரு வாளியில சாயப்பொடி போட்டு அத காவி வேட்டியா மாத்திக் கட்டிகிட்டாரு..
ஒரு சாமியாரு அப்பா மேல கவிதையா பாடுனாரு..
எல்லா சாமிங்களுமே திருவண்ணாமலை பிரசாதமா தீபகொப்பறை கருப்பு சாந்தை நெத்தியில விட்டுவிடுவாங்க..

Saturday, 24 March 2012

சித்தர்கள்


கடந்த அக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் சித்தர்களைப் பற்றி கீழ் கண்ட தலைப்புகளில்
உரை நிகழ்த்தினேன் -
சும்மா,
ஓம்.
வானியல்,
ரசவாதம்
மருத்துவம்
ஜோதிடம்
மற்றும் மகரிஷியும் சித்தர்களும்
ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு மணி நேரம் சுருக்கமாகப் பேசினேன்..!
சித்தர்களை பற்றி அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.மெய்ஞாநிகளான அவர்களை உலகின் முதல் விஞ்ஞானிகளாக கொள்ளலாம். தமிழ் நாட்டில் வாழ்ந்த எண்ணற்ற சித்தர்களில் 18 சித்தர்கள் குறிப்பிடப் பட வேண்டியவர்கள்.
ஒவ்வொருவர் பற்றியும் அவ்வப்போது எழுதுகின்றேன்..
முதலில் மாயூரத்தில் ஜீவசமாதியில் இருக்கும் குதம்பைச் சித்தர் பற்றி விரைவில்...

Friday, 23 March 2012

WEEKEND WISDOM

திருக்குறள்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

விளக்கம்

தோ பாரு கண்ணு...
டுபாக்கூர் பார்ட்டிய கன் பார்ட்டின்னு நம்பிக்கினு கீறதும்
ஷோக்கா தொயில் பண்றவன டவுட் பண்ணிக்கினு கீறதுமா
இருந்தே...ஓம் பொயப்பு நாறிடும்..பேஜாராயிடும்..நீ டர்ராயிடுவே..!



ஜீவ சமாதி

மகரிஷி மணிமண்டபம், ஆழியார்

ஜீவ சமாதி அப்டீன்னா என்னான்னு ரெண்டு பேரு கேட்டாங்க –
சமாதின்னா செத்து போனவங்களப் புதைச்ச இடமுன்னு சொல்லுவாங்க..
ஜீவசமாதின்னா உயிரோட புதைக்கிறதா? அது கொலை இல்லையா?

வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து இறைநிலையை உணர்ந்து இனி
வாழ்ந்தது போதும்ன்னு நினைக்கும் மகான்கள், தங்கள் சிஷ்யகோடிகளிடம்
ஒரு நல்லநாள் குறித்துக் கொடுத்து சமாதியில் அமர்வார்கள்.

உடல் இயக்கத்தையும், மன இயக்கத்தையும் நிறுத்தி, உயிர் மாத்திரம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும்படி செய்து கொள்ளுவார்கள். இதுவே ஜீவசமாதி.

இவர்கள் அமர்ந்த இடத்தின்மீது கோவில் அமைக்கப்படும்போது
அந்த கோவிலில் ஆற்றல் களம் அபரிமிதமாக இருக்கும். அப்படிப்பட்ட கோவில்கள்தான் திருப்பதி, பழனி போன்ற எண்ணற்ற கோவில்கள்..இப்படி சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த கோவில்களுக்கு குடமுழுக்கு தேவை இல்லை.

சித்தக்காட்டுல ஒரே இடத்துல 63 பேரு ஜீவசமாதி அடைஞ்சிருக்காங்க..!

Thursday, 22 March 2012

சித்தர்காடு

மாயரத்துலேருந்து குத்தாலம் பஸ்ல போவும்போது கண்டக்டர் " செத்தகாடு" எல்லாம் இறங்குங்கன்னு
ஒரு இடத்துல குரல் கொடுப்பார். சித்தர்க்காடு என்பதுதான் செத்தகாடாகி விட்டது நான் ஸ்கூல் படிச்சப்ப ஏழெட்டு பேர் சித்தக்காட்டிலேருந்து கொரநாட்டு ஸ்கூலுக்கு நடந்தே வருவாங்க..நாங்களும் லீவு நாள்ல அங்க போயி வயவெளியில விளையாடுவோம்.

திருச்சி வந்தப்புறம்தான் சித்தக்காட்ல வாழ்ந்த மகான்கள் பத்தி தெரிஞ்சுது..

சித்தர்காடு தலவரலாறாகச் சொல்லப்படும் கதை -

சிற்றம்பல நாடிகளைத் தலைமைக் குருவாகக் கொண்டு, அவர்தம் சீடர்களாக அறுபத்து மூவர் மகான்கள் உடனுறைந்தனர். நாள்தோறும் திருக்கூட்டமாகச் சென்று பிட்சை ஏற்று உண்பது அவர்தம் வழக்கம். எல்லா நாள்களிலும் செல்வார்கள் என்று சொல்ல முடியாது.

ஒருமுறை சிறப்பாலும் செல்வத்தாலும் சிறந்த இல்லறத்தார் ஒருவர் திருக்கூட்டத்தாரை அணுகி, தம் இல்லத்துக்கு ஒருநாள் எழுந்தருளி, திருவருளமுது உண்டு, தங்களை வாழ்விக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். திருக்கூட்டத்தினரும் ஒருநாள் குறிப்பிட்டு வருவதாக ஏற்றுக்கொண்டனர். குறிப்பிடப்பெற்ற நாளும் வந்தது. திருக்கூட்டத்தினர் அறுபத்து மூவரும் அவர்தம் இல்லம் சென்று பிட்சை ஏற்கத் தயாராக இருந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் திரண்டு நின்று உபசாரம் செய்தனர்.திருக்கூட்டத்தினரை அழைத்தவரின் இல்லக்கிழத்தியார் எல்லாப் பணிகளையும் ஏற்றுச் செய்தாலும், தவறு ஏதும் நடந்துவிடக்கூடாதே என்ற படபடப்புடன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இக்காலத்தில் ஒரு வேலையை நிறைவாக இயக்குவதற்கேற்ற வசதிகள் உண்டு. அக்காலத்தில் அவ்வாறு எளிமையாய்ச் செய்துவிட இயலாது.திருக்கூட்டத்தினர் வந்திருந்த இல்லத்தில் அடுத்தடுத்து மங்கலப் பொருளாகக் குத்துவிளக்குகள் ஏற்றப் பெற்றிருந்தன. விளக்கை எரிவிக்க அக்காலத்தில் வேப்பெண்ணெய் பயன்படுத்தப்பெற்றது. வேப்பெண்ணெய் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பெற்றிருந்தது.திருக்கூட்டத்தினருக்கு உணவு பரிமாறப் பெற்றது. எல்லா வேலைகளையும் இல்லத்து அம்மையாரே செய்து கொண்டிருந்தார். பதற்றம் காரணமாக, திருக்கூட்டத்தினருக்குப் பசுநெய் வார்ப்பதற்குப் பதிலாக, விளக்கு எரிப்பதற்காக வைத்திருந்த வேப்பெண்ணெயை வார்த்து விட்டார். அறுபத்து மூவரைக் கொண்ட திருக்கூட்டத்தில் ஒருவர் மட்டும் கசப்புச் சுவை தெரிந்து ஓக்கலித்து விட்டார். ஓக்கலித்தாலும் சத்தம் அதிகம் வெளிப்படாமல் அடக்கிக் கொண்டார். திருக்கூட்டத்தின் தலைவராகிய சிற்றம்பல நாடிகளார் இதனை உணர்ந்தார்.“தவச்சுவை அறிவார் அவச்சுவை அறியார்” என்று கூறினார். மற்றை வகையில் விருந்து சிறப்பாக நடந்தேறியது. திருக்கூட்டத்தினர் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

அடுத்த நாள் காலையில் திருக்கூட்டத்தினர் எண்ணிக்கையில் ஒருவர் காணப்பெறவில்லை. “அவச்சுவை அறிவார் தவச்சுவை அறியார்” என்ற வாசகம் எழுதப்பெற்ற ஓலை நறுக்கு ஒன்று அவர் இருந்த இடத்தில் காணப்பெற்றது. அவர்தான் முதல்நாள் விருந்தில் வேப்பெண்ணெய் என்று தெரிந்து ஓக்கலித்தவர்.

சில ஆண்டுகள் கழிந்தன. சிற்றம்பல நாடிகள் தம் கூட்டத்தினருடன் ஜீவசமாதி அடையப் போவதாக அறிவிப்புச் செய்தார். ஊரே திரண்டது. அரசன் செய்தியறிந்து வந்தான். அரசன் முன்னிலையில் சிற்றம்பல நாடிகள் தலைமையில் அறுபத்திரண்டு பேரும் அமர்ந்து ஜீவசமாதி அடைந்தனர். அப்போது வயதான ஓர் அம்மையார் கண்ணீர்விட்டு அழுதார். அருகில் இருந்தவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அப்போது அம்மையார் “இக்கூட்டத்தில் இருந்த ஒருவர் போய்விட்டார். அவரும் இருந்திருந்தால் இப்போது அவரும் இவர்களுடன் ஜீவசமாதி அடைந்திருப்பாரே! என்று வருந்தினேன்.” என்று கூறினார். அதே சமயத்தில் அவரும் வந்து விட்டார். வந்தவுடன் அவர் சிற்றம்பல நாடிகளின் ஜீவசமாதியின் முன்னர் நின்றுகொண்டு “அவச்சுவை அறியாமல் தவச்சுவை அறிந்து விட்டேன். என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கதறி அழுதார். சிற்றம்பல நாடிகளின் ஜீவசமாதி வெடித்தது. உள்ளிருந்து சுவாமிகள் வெளிப்பட்டு வந்து, தவச்சுவை அறிந்தவரைத் தம்முடைய மார்புடன் அணைத்துக் கொண்டு சென்று, தம்முடைய சமாதியிலேயே உடன் இருத்திக் கொண்டார். இவையெல்லாம் உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ஜீவசமாதியில் அமர்ந்த அனைவரையும் அழுதும் தொழுதும் அரற்றியும் வழிபாடாற்றி நின்றான் என்பது வரலாறு.

ஏன் சித்தக்காட்டைப் பத்தி இன்னிக்கி எழுதுனேன்னா ஒரு சுவாரஸ்யமான அனுபவம் -
நேத்தி நைட் பாட்டு கேட்டுக்கிட்டுருந்தப்ப ராகவேந்திரர் படத்துல வர்ற க்ளைமாக்ஸ் பாட்டு "அழைக்கிறான் மாதவன் " என்னை அப்படியே உலுக்கிடிச்சு..அதுவும் ஜேசுதாஸ் " குருவே சரணம்" ன்னு
உருகும்போது ஒரு பரவச நிலை..உண்மையிலே ஒரு தெய்வீக அனுபவம்தான்..

இதே கதைதானே நம்ம ஊர்லயும் நடந்துருக்கு...இது மனசுல ஓடிகிட்டே இருந்துச்சி..
அதத்தான் இங்கே share பண்ணியிருக்கேன்!

சித்தர்காடு கோவில் போட்டோ உடனே கிடைக்கல..அடுத்த தடவ மாயரம் வந்தா இங்க போயிட்டு வாங்க..மிக அமைதியான இடம்.. ஆற்றல்களம் அதிகம்..ஈசியா தவம் செட் ஆகும்..

குதம்பைச் சித்தர் ஜீவசமாதியும் மாயரத்துலதான் இருக்கு..







Wednesday, 21 March 2012

MIDWEEK INSPIRATION




யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.



விளக்கம்

எவங்கிட்ட பேசுனாலும் வார்த்தைய பாத்து யூஸ் பண்ணு நைனா..
தப்பா உட்டேன்னு வச்சுக்க..
வாய பேத்து வெத்தல பாக்கு போட வச்சுடுவானுங்கோ..

கிராமிய சேவை




கிராமிய சேவை திட்டம் இரூர் கிராமத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி துவங்குகின்றது.
மாலா ரொம்ப, ரொம்ப பிஸி..

பெரம்பலூர் கலெக்டர் வருகிறார்..
அழைப்பிதழ் தரும் வேலை நடந்து கொண்டிருக்கின்றது..


அனைவரும் வருக...வருக !

Tuesday, 20 March 2012

ஐம்பதாவது POST

வெற்றிகரமான ஐம்பதாவது பதிவு..
உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி..
ஐம்பது என்றவுடன் உடனே எனக்கு இந்த ஆண்டு ஐம்பது நிறைவு காணும்
சுந்து, மாலா மற்றும் 1962 ல் பிறந்த அனைவரும் நினைவுக்கு வந்தார்கள்.
எல்லாருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

ஐம்பதாவது post யையாவது உருப்படியா எழுதுன்னு ஒரு ஃபிரெண்ட் சொன்னதால “ 55 Ways to make a woman happy “என்ற popular post ஐ போட்டிருக்கேன்! இது ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சிருந்தாலும் திரும்ப திரும்ப படிக்கறது நல்லதுதானே!


55 WAYS TO MAKE A WOMAN HAPPY

It's not difficult to make a woman happy.A man only needs to be :
1. a friend2. a companion3. a lover4. a brother5. a father6. a lawyer7. a master8. a chef9. an electrician10. a carpenter11. a plumber12. a mechanic13. a decorator14. a stylist15. a sexologist16. a gynecologist17. a psychologist18. a pest exterminator19. a psychiatrist20. a healer21. a good listener22. an organizer23. very clean24. sympathetic25. athletic26. warm27. attentive28. gallant29. intelligent30. funny31. creative32. tender33. strong34. understanding35. tolerant36. prudent37. ambitious38. capable39. courageous40. determined41. true42. dependable43. passionate 44. compassionate Without Forgetting To:45. give her compliments regularly46. love shopping47. be honest48. be a good provider49. not stress her out50. not look at other girlsAnd At The Same Time, Must Also:51. give her lots of attention, but expect little yourself52. give her lots of time, especially time for herself53. give her lots of space, never worrying about where she goes It Is Very Important:54. never to forget: birthdays, anniversaries and arrangements she makes55. and always devote time for hugging, kissing and loving-loving!
hehe kidding.... :P
to sum up the above…
. Every man should do the following....
· Make her feel that she’s the best.
· Make her feel that she’s the only one.
· Make each and every day important with her.
· Appreciate everything she has.
· Make her laugh.
· Respect her.
· Hug her tight. Kiss her romantically.
· Be honest. Loyal. Confident.
· Make her safe in your arms.
· NEVER RUN OUT OF LOVE



Monday, 19 March 2012

வந்துட்டேன்!

வந்துட்டேன்யா.... வந்துட்டேன்!

பெங்களூருல மூணு நாளு நண்பர்கள் சங்கமம் -
ஸ்ரீராமோட ஃபிரெண்ட் நிதினோட கல்யாணத்துக்காக ஆறு பேமிலி இங்கேயிருந்து போயிருந்தோம்..
ரொம்ப நாளக்கி அப்புறம் ஒரு கெட்டுகெதர் -
கல்யாண மண்டபத்துல லூட்டி அடிச்சோம்..
நெறைய மலரும் நினைவுகள்..
எழுத ஏராளமா இருந்தாலும்
blog தர்மம், நட்பு தர்மம் பாக்க வேண்டியிருக்கு..

ஆபீஸ் வேல, வீட்டு வேல குமிஞ்சு கிடக்கறதால இன்னிக்கி இந்த அளவுதான்!

Thursday, 15 March 2012

ROCKFORT



Did you know Trichy Rockfort is 3.8billion years old?


Rockfort or Ucchi Pillayar koil, is a combination of two famous 7th century Hindu temples, one dedicated to Lord Ganesh and the other dedicated to Lord Shiva, located a top of a small rock in Trichy, India. Geologically the 83m high rock is said to be one of the oldest in the world, dating over 3 billion years ago, and mythologically this rock is the place where Lord Ganesh ran from King Vibishana, after establishing the Ranganathaswamy deity in Srirangam.


The ‘rock’ is about 3.8 billion yeas old .. older than Himalayas.

WEEKEND WISDOM


Before Speak or Promise
T - is it 'True' ?
H - is it 'Helpful' ?
I - is it 'Inspiring' ?
N - is it 'Necessary' ?
K - is it 'Kind' ?

THINK
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

விளக்கம்

எந்த தொயிலையும் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி உசாரா யோசி கண்ணு..
ஆரம்பிச்சுட்டு யோசிச்சேன்னு வச்சுக்கோ...டப்பா டான்ஸ் ஆடிடும்..!



லீவு விண்ணப்பம் -
ஸ்ரீராமின் தொட்டில் தோஸ்த் நிதினுக்கு
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில்
நடைபெறும் கல்யாணத்தில்
கலந்துகொள்ள செல்வதால்
மூன்று நாட்கள் ஞான வயலுக்கு லீவு
தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Mala Jp

Wednesday, 14 March 2012

சிரிப்பு ஞானம் - 1

ஒருத்தனை சிரிக்க வச்சுட்டா அதுவே ஒரு பெரிய தொண்டு!


ஓஷோ சொல்லுறாரு –

"மனுசன் இப்ப ரொம்ப, ரொம்ப சீரியஸ் ஆயிட்டான்..அவனுக்கு சிரிக்கிறது அப்டீன்னு என்னான்னே தெரியல...ஒரு மணி நேரம் தியானம் செய்றதக் காட்டிலும் ஒரு செகண்ட் உங்ககிட்டேருந்து வரக்கூடிய குபீர்/ வெடி சிரிப்பு ரொம்ப எபக்டிவ்... ஞானங்கிறதே ஒரு பிரபஞ்ச சிரிப்புதான்..!”

அவரு சொன்ன முல்லா நசுருதீன் ஜோக்கு -

முல்லா நசுருதீன் ஒரு பல் டாக்டரிடம் சென்றார்...."ஒரு பல் புடுங்க எவ்வளவுங்க?" என்றார்"நானூறு ரூபாய்" ...."ஆனால் வலிக்காமல் இருக்க ஒரு ஊசி போடுவோம்...அதுக்கு முன்னூறு ரூபா எக்ஸ்ட்ரா"என்றார் டாக்டர்...“ஊசியெல்லாம் வேண்டாம்...அப்படியே எடுத்துருங்க....முன்னூறு ருபாய் மிச்சம்""கிராமத்து மக்கள் வலிமையானவர்கள் என்று கேட்டிருக்கிறேன்...நீங்க ரொம்ப தைரியமானவர்...உங்கள் வலிமையை பாராட்டுகிறேன்" என்றார் டாக்டர்..."ரொம்ப புகழ்றீங்க டாக்டர்....அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்....பல் புடுங்க வேண்டியது என் மனைவிக்கு"என்றார் முல்லா....

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது
பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூடபேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளேஅமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதானகுற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாகமுடிந்த மகிழ்ச்சியில்” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்குநான் போவது?” என்று கேட்டார்..


Tuesday, 13 March 2012

MIDWEEK INSPIRATION






போன வார MIDWEEK INSPIRATIONS வளவளன்னு

போரடிச்சதுன்னு feedbacks வந்ததாலே இனிமே
சிம்பிளா இருக்கும்படி பாத்துக்குறேன்!



Monday, 12 March 2012

அல்வா




ஞான அல்வா !

போன ரெண்டு blog லேயும் அல்வா வந்ததால ஆபீஸ் நண்பர் அல்வா பத்தி அதுவும் " அல்வா கொடுக்கறதப்" பத்தி post போடச் சொன்னாரு...
" ஐயா.. உங்களுக்கு நாளைக்கு நிச்சயம் அல்வா வாங்கி கொடுக்கிறேன்..ஆள விடுங்க " ன்னு கெஞ்சியும் வேற வழி இல்லாம அவரோட வேண்டுகோள்படி அல்வா தந்த ஞானத்தை கொஞ்சம் எழுதும்படி ஆயிடுச்சு..!

அல்வாவைக் கண்டு பிடித்தது யார்? ஏன் இந்த பெயர் வந்தது அப்படீன்னு
ஆராஞ்சதுல ஒரு பெரீய உண்மை விளங்கிச்சு..
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச ஆயிரக்கணக்கான விசயங்கள்ல
அல்வாவும் ஒண்ணு..அவர் பேரிலியே ஆல்வான்னு சொல்லப்பட்டு பிறகு
மருவி " அல்வா" வாக இந்தியாவுல பிரபலமாயிடுச்சு..

அல்வா திருநெல்வேலியில எப்படி famous ஆச்சு? தாமஸ் அல்வா எடிசனுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு? இப்படியெல்லாம் நண்பர்கிட்ட discuss பண்ணுனேன். அப்புறம் ஏழாம் அறிவு கொண்டு யோசிச்சதுல
“ இந்த ஊர்ல நம்மாழ்வார் மாதிரி தம்மாழ்வார்ன்னு ஒரு சமையல்காரர் இருந்திருக்கலாம்.. அவரோட வழித் தோன்றல் தாமஸ் ஆழ்வார்ன்னு ஒருத்தர் அமெரிக்கா போயிருக்கலாம்..அவரோட ஜீன்ஸ்ல வந்தவருதான் நம்ம தாமஸ் அல்வா எடிசன்” ன்னு கண்டுபிடிச்சப்ப எனக்கே புல்லரிச்சுப் போயிடிச்சு..!.

"எனக்கே அல்வா கொடுக்கிறீயே...நைனா...
திருநெல்வேலிக்கே அல்வாவா.. "
இப்படியெல்லாம் நெறைய பேரு அல்வா கொடுக்கறதப் பத்தி பேசறாங்க..
அதாவது தெரிஞ்ச விஷயத்தை வேற மாதிரி சொல்லி ஏமாத்தறது - இதான் நான்
புரிஞ்சிக்கிட்டது..
அடுத்தவங்களப் பத்தி வாய்க்கு வந்தமாதிரி பேசறது சிலருக்கு
அல்வா சாப்டற மாதிரி..!

அல்வா - மல்லீப்பூ combination பத்தியும் discussion ஓடிகிட்டுருக்கு.. இது முடிய ரொம்ப நாளாகும் போலிருக்கு..

கடைசியில அல்வா பத்தி எழுதச் சொன்ன நண்பர் எங்கிட்ட வந்து சத்தியமா "திருப்பதிக்கே லட்டா " ன்னு உங்களைக் கேக்க மாட்டேன்னு சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டாரு..!
PS
மாயரத்துல காளியாகுடி ஹோட்டல்ல " அடி அல்வா" ன்னு ஒண்ணு கிடைக்கும்..தெரிஞ்சவங்க மூலம்தான் வாங்க முடியும்....அல்வா கிண்டுன பாத்துரத்துல கடசியா ஒட்டிக்கிட்டு இருக்கிறத எடுத்து வச்சுருப்பாங்க.. ஜவ்வு மிட்டாய் மாதிரி.... அதன் டேஸ்டே தனி...(:-P...






POWER HOLIDAY!








தமிழ்நாட்ல பவர் கட் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி இப்ப எப்ப பவர் வருங்கிற
நெலம..! மாநிலத்த பல zone ஆ பிரிச்சுவாரம் ஒரு நாள் பவர் ஹாலிடே ன்னு
அரசாங்கம் அறிவிச்சிருக்கு..! திருச்சிக்கு சனிக்கிழமை பவர் ஹாலிடே!
பவர் கட் போயி இப்ப பவர் ஹாலிடே வந்துருக்கு..!

அப்பாடா...! சனிக்கிழமை லீவு ன்னு ஜாலியா இருந்தேன்..! வாழ்க்கையில
எனக்கு சனி லீவே கிடச்ச்துல்லே! எலிமெண்டரி ஸ்கூல், ஹை ஸ்கூல்,
காலேஜ், வேலையில எல்லா இடத்துலேயும் சனிக்கிழமை லீவே கிடைக்கிலே..
ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ப்ரோக்ராம் இருக்கிறதுனாலே இந்த பவர் ஹாலிடேயை
ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்..!ஆனால் BHEL க்கு லீவு இல்லன்னு சொல்லிட்டாங்க..!

தமிழ்நாட்ல இப்ப famous ஜோக் என்னான்னா -
திருநெல்வேலியில இருட்டுக்கடை அல்வா ரொம்ப பிரபலம்!
புதுசா வந்த ஒருத்தரு அங்க இருட்டுக்கடையைத் தேடிகிட்டு இருக்காரு..
" சார்! இருட்டுக்கடைக்கு எப்படி போகணும்? "
"தமிழ்நாட்ல இப்ப எல்லா கடையும் இருட்டுக்கடைதான்!"


Edited to add satellite image of India!!!

Saturday, 10 March 2012

வெட்டி ஞானம்







COMMENTS PLEASE...




நேத்து சாயந்திரம் ஒரு ஃபிரெண்ட் (என்னோட பழைய பாஸ் ) phone ல கூப்பிட்டு
" யாருக்காக நீ blog எழுதற? எனக்கென்னவோ
வேல வெட்டி இல்லாதவன் தன்னைப் பத்தி
பீத்திக்கறதுக்கு எழுதற மாதிரி இருக்கு." ன்னு
அப்பட்டமா கமெண்ட் அடிச்சு நக்கல் பண்ணுனாரு ...!..
நா அவருக்கிட்ட உங்க கமெண்டை என் blog லியே போடுங்க..மத்தவங்க என்னா சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்குறேன் அப்டீன்னு சொன்னேன்.....அவரு மாட்டேன்னு சொல்லிடாரு..

Blog எழுத ஆரம்பிச்சு ஒரு அம்பது நாள் ஆகல.. அதுக்குள்ளே இப்படி ஒரு விமர்சனம்..

நா post பண்றத நெறைய பேரு லைக் பண்றாங்கன்னு எனக்கு ஞானதிருஷ்டியில தெரியுது....இருந்தாலும் அப்பப்ப feedbacks கிடைச்சா நல்லா இருக்கும்......atleast படிக்கிறவங்க தங்கள் வருகையை ஒரு தடவையாவது பதிவு பண்ணுனா நல்லா இருக்கும்!

எனவே இந்த Blog படிக்கும் என் இனிய வாசகர்களே..
தங்கள் மேலான கருத்துகளை, விமர்சனங்களை, வாழ்த்துக்களை தயவு செய்து தெரிவித்து என்னை மேலும், மேலும் உற்சாகப் படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.. மிக்க நன்றி!





Friday, 9 March 2012

WEEKEND WISDOM

திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

விளக்கம்

ப்ராப்ளமே வராம வேல கரீட்டா முடியணுமா...
யோசி நைனா... இன்னா வேலய எவங்கிட்ட வுட்டா
ஓயுங்காச் செய்வான்னு பாத்துக் குடு..

அஞ்ஞானம் - 1

ரொம்ப பேரு அஞ்ஞானத்த ignorance ன்னு நெனச்சுக்கிட்டுருக்காங்க..
Ignorance ன்னா தெரிஞ்சிக்கிட்டே திரும்ப, திரும்ப ஒரே தப்பை செய்றது..
Ignorance ன்னா அலட்சியம் ன்னு பேரு...இருந்தாலும் அஞ்ஞானத்தை ignorance ன்னு அர்த்தம் பழகிட்டதாலே அதையும் பாக்கலாம்..
அஞ்ஞானம் ன்னா அறியாமை, மாயை, துன்பங்களுக்கு காரணம் அப்படீன்னு
எடுத்துக்கலாம்..
அஞ்ஞானத்தைப் பத்தி சொல்ல நெறைய இருக்கு...
அப்பப்ப இது பத்தி post ல போடறேன்
ஓஷோ சொன்னதுல கொஞ்சம் இங்க தந்துருக்கேன்..
இப்பதிக்கு படிச்சு வச்சுக்குங்க.. முடிஞ்சா இதுல எப்புடி அஞ்ஞானமுன்னு யோசிச்சுக்கிட்டுருங்க.. !!
(அஞ்ஞானத்தை அறுக்க சில அறுவைகளைத் தாங்கிக் கொள்ள
பழகவேண்டும்! )



யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது. இது எதனால்? மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது. ''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல: நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது. யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது, ''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!'' எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள். 'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள். அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள். யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால், நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள். செய்தி உண்மையானது என்றாலும், ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான். யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார். அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும், என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள். இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும். எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:எல்லோரையும் நிந்திப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.

Thursday, 8 March 2012

சமையல் ஞானம்



ஆழியாரில் ஒரு நண்பரை திருச்சி வரும்போது வீட்டுக்கு
சாப்பிட அழைத்தாள் மாலா -








" Jp யோட பொங்கல், ஸ்ரீராமோட டீ கிடைக்கும்ன்னு சொல்லுங்க... நிச்சயம் வாரேன் " என்றார் நண்பர்.அவ்வளவு பிரசித்தம் எங்களோட கைவண்ணம்!

எனக்கும், ஸ்ரீராமுக்கும் இந்த ஞானம் கொஞ்சம் ஜாஸ்தி..! மாலா இதுல ஓர் expert* ங்கிறதால ஸ்ரீராமுக்கு சின்ன வயசுலேருந்தே டீ போட, தோசை வாக்க இப்படின்னு பழக்கி அவன் +2 படிக்கும்போது ரொம்ப பிரமாதமா சமைக்க ஆரம்பிச்சுட்டான்..! அதுவும் புலவு பண்ண ஆரம்பிச்சாலே அந்த ஏரியா முழுக்க மணம் வீசும்.. பொண்ணுங்க எல்லாம் ஸ்ரீராமுகிட்ட வந்து " ஏண்டா..எங்க மானத்த வாங்குற....அவன் எப்படி சமையல் பண்றான்...நீங்களும் இருக்கீங்களே..ஒரு காப்பி போட கூட தெரியல..அப்படீன்னு எங்க அம்மா எங்கள திட்டுறாங்க..! " ன்னு சொல்லி பொலம்புவாங்க. . அப்புறம் அவன் பண்ற பிரியாணி/புலவை ஒரு கை பாப்பாங்க..!

மாலா அமெரிக்காவுல ஆறு மாசம் இருந்தப்ப ஸ்ரீராமும், நானும் காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சு ஏழரைக்குள்ள காலை டிபன், மத்திய லஞ்ச் ரெண்டையும் முடிச்சுடுவோம்.. எவ்வளவோ பேரு ஹெல்ப் பண்றேன் ன்னு வந்தாங்க.. சாயந்தரம் ஏழு மணிக்கு வாங்கன்னு சொல்லி அவங்கள அனுப்பிட்டு அவங்க வர்றத்துக்குள்ள ராத்திரி சாப்பாட்டை ரெடி பண்ணி வச்சிடுவோம்..வந்தவங்கள சாப்பிட வச்சு அனுப்புவோம்...
இந்த ஆறு மாதத்துல நெறைய்ய வரைட்டியா சமைச்சு, சமைச்சு சமையல்ல நளச் சக்கரவர்த்தியா ஆயிட்டோம்..! ஒரு ஹோட்டல் நடத்துற அளவுக்கு எங்களுக்கு ஞானம் இருக்கு...!
மாலா திரும்பி வந்தவுடனே ஸ்ரீராம் அடிச்ச statement ரொம்ப famous -
" இந்த லேடீஸ் எல்லாம் அரை மணி நேரம் சமையல் செய்றதை ரெண்டரை மணி நேரம் எடுத்துக்கிறாங்க.. எல்லாம் ஃபிராடுங்க...! “

என்னோட சமையலப் பத்தி சொல்லுணும்னா ஒரு நிகழ்ச்சி - இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னாடி சுவிட்சர்லாந்த் போயிருந்தப்ப நா பண்ணுன பிசிபேளாபாத் ஒத்தருக்கு ரொம்ப பிடிச்சுப்போய் நல்லா ரசிச்சு, ருசிச்சு
சாப்பிட்டுவிட்டு அதுல கொஞ்சத்தை Alps ( Jungfru - top of Europe ) உச்சியில ஐஸ்ல புதைச்சு வச்சாரு..ஒரு time capsule மாதிரி.. !!

*An expert is a person who has made all the mistakes that can be made in a very narrow field அப்டீன்னு தப்பா புரிஞ்சுகிட்டிருக்கீங்க...ஒரு துறையில எல்லாம் தெரிஞ்ச திறமைசாலின்னு அர்த்தம்..!





Wednesday, 7 March 2012

MIDWEEK INSPIRATION






நானும், மாலாவும் மூணு நாள் ஆழியாரில் M.Sc ( Yoga for Human Excellence – Bharathidasan University ) contact program முடிச்சுட்டு டெஸ்ட் எழுதிட்டு நேத்தி ராத்திரி திருச்சி வந்து சேந்தோம்.
மறுபடியும் மாணவர்களாக மாறினது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சி..!
படிக்கிறதெல்லாம் Interesting & useful ல்லா ரொம்ப இருக்கிறதால உருப்படியான degree என்பதும் மகிழ்ச்சி..! இது பத்தி அப்புறம் சொல்றேன்!
இன்னும் settle ஆகாததனால இப்பதிக்கி Midweek Inspiration –




10 TIPS TO BE YOUR BEST



1. THE BEST KNOW WHAT THEY WANT
I think a lot of people spend their life being average or good at something, but they don't strive to be great. The best of the best not only know what they want, but they want it more.
2. THE BEST WANT IT MORE
We cannot measure desire in terms of merely thought and wishes. The best not only do the things that others won't do and invest the time others won't invest, but they do so with passion and intent to get better. The best are never satisfied with where they are.
3. THE BEST ARE ALWAYS STRIVING TO BE BETTER
If you are striving to get better, then you are always growing. And if you are always growing, then you are not comfortable. To be the best, you have to be willing to be uncomfortable, and embrace it as a part of your growth process. The best see where there is room for improvement and their humility and passion drives them to improve. The average ones however, don't see it or don't want to see it. The fact is past success does not determine future success. Future success is the result of how you work and prepare and practice and how you strive to improve every day. It's a commitment that the best of the best make every week, every day, every hour, and every moment. Force yourself to be uncomfortable.
4. THE BEST DO ORDINARY THINGS BETTER THAN EVERYONE ELSE
Work hard on the right things. It means you must identify the very "little things" that are fundamental to your success, and then you must focus on them, practice them, and strive to execute them to perfection.
5. THE BEST ZOOM-FOCUS
There is no secret recipe. If you incrementally improve each day, each week, each month, by the end of the year you'll see remarkable results and growth. When you zoom-focus on the process, the outcome takes care of itself. Master the fundamentals.
6. THE BEST ARE MENTALLY STRONGER
Being mentally strong means you stay positive through adversity. It means you are resilient when facing pressure, challenges and change. Weed and feed: Each day you need to weed out negativity and feed it positivity. You need to weed out the self-doubt and negative talk and feed it positive thoughts, memories and visuals.
7. THE BEST OVERCOME THEIR FEARS
Those that succeed, those that reach the pinnacle of greatness, are able to face this battle (overcoming fear) and win.
8. THE BEST SEIZE THE MOMENT
When the best are in the midst of their performance they are not thinking ‘What if I win?’ or ‘What if I lose?’ They are not interested in what the moment produces, but they are only concerned with what they produce in the moment. Rather than hiding from pressure, they rise to the occasion. As a result, the best define the moment rather than letting the moment define them.
9. THE BEST LEAVE A LEGACY
You leave a legacy by living and working with a bigger purpose, you leave a legacy by making your life about more than just you. You leave a legacy by moving from success to significance.
10. THE BEST MAKE EVERYONE AROUND THEM BETTER
The point is to strive to be your best and inspire others to be their best, because it's in the striving where you find greatness, not in the outcome.

Friday, 2 March 2012

WEEKEND WISDOM


தீதும் நன்றும் பிறர் தர வாரா!

திருக்குறள்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

விளக்கம் -
சோக்கா நீ ஜபர்தஸ்தா கீறியோ...இல்லாங்காட்டி சோப்ளாங்கியா சொங்கியா கீறியோ ரெண்டுத்துக்கும் ஒன்னோட டீலிங்க்ஸ் தான் ரீசனுன்னு புரிஞ்சிக்கோ ..மாமூ..!