ரம்பூட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
ரம்பூட்டான் (Rambhutan) என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த (Hairy) எனப் பொருள்.
ரம்பூட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் பருமனைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.
இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது. என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment