Tuesday, 19 July 2022

சிரிப்பு ஞானம்

பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகளும், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம்.

கஸ்டமர் கேர்: ஆமா சார்... ஆனா இது கஸ்டமர் கேர்.. கஷ்டமான கேர் இல்ல! உங்களுக்கு உதவுறதுக்காகதான் நாங்க இருக்கோம். என்ன உதவி வேண்டும்? 

சரவணன்: எனக்கு 5 வயசுல ஒரு பையன் இருக்கான் சார். சரியான வாண்டு, துறுதுறுன்னு இருப்பான். 

கஸ்டமர் கேர்: சின்ன பசங்க அப்டிதான் சார் இருப்பாங்க.. நாமதான் சமாளிக்கனும். 

சரவணன்: அது விடுங்க சார்.. அவன் நீங்க கொடுத்த சிம் கார்ட முழுங்கிட்டான்! 

கஸ்டமர் கேர்: அய்யயோ! அப்ப உடனே டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க.

 சரவணன்: அத அப்றம் பாத்துக்கலாம் சார்.. சிம் கார்ட்ல 500 ரூபா பேலன்ஸ் இருந்துச்சு.. அவன் பேசுனா காசு போவுமா? 

கஸ்டமர் கேர்: கியோவை அழைத்தமைக்கு நன்றி... ஃபோன வைடா டேய்! 

மனைவி: ஏங்க! அந்த டாக்டர் இந்த நடுராத்திரி நேரத்துல கத்திய தூக்கிட்டு எங்க போறாரு..? 

கணவன்: அவருக்கு தூக்கத்துல ஆப்பரேசன் செய்ற வியாதியாம்.. உனக்கு தெரியாதா? 

மனைவி: எனக்கு தெரியாதே.. ஏங்க அவருக்கு அப்டி ஆச்சு? 

கணவன்: அத டாக்டர் கிட்டதான் கேக்கனும். இன்னொன்னு தெரியுமா? அவருக்கு குளிர் காலத்துல ஆப்பரேஷன் பன்றதா இருந்தா ரொம்ப புடிக்குமாம். 

மனைவி: அப்டியா? கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க மாமா வயித்து வலிக்கு காட்ட போனப்ப கூட குளிர் காலத்துல சர்ஜரி பன்னலாம்னு சொல்லிதான் அனுப்பி இருக்காரு.. ஏன் இப்டி பன்றாரு? 

கணவன்: அவரு ஒரு டுபாகூர் டாக்டர். அப்பரேசன் செய்றப்போ கை நடுக்குனா குளிர்ல நடுங்கிருச்சுன்னு சொல்லி சமாளிக்கலாம்ல.. அதான்..

 மனைவி: இப்பவாச்சும் சொன்னீங்களே! என் மாமா தப்பிச்சாரு..

அரவிந்த்: டாக்டர்.. எனக்கு ரொம்ப கோபம் வருது.. என்ன பண்ணலாம்?

 மருத்துவர்: தண்ணி குடி தம்பி.. 

அரவிந்த்: (கோபத்துடன்..) இதெல்லாம் பழைய ஐடியா.. இதுக்கூட தெரியாமலா நான் இங்கு வந்திருக்கேன்.. வேஸ்டா போச்சு, நீங்க எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சீங்களோ..

மருத்துவர்: (30 வினாடி அமைதியா இருந்துட்டு) உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சு போச்சு..? இப்ப நான் சொல்றத கேளுங்க..

 அரவிந்த்: டாக்டர்ர்ர்ர்ர்... என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க! ஏன் இப்ப அமைதியா இருந்தீங்க? 

மருத்துவர்: (30 வினாடி அமைதியாக இருந்துட்டு) உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சு போச்சு..? இப்ப நான் சொல்றத கேளுங்க..

அரவிந்த்: அப்போ உங்கள மாதிரி இருந்தால்..? 

மருத்துவர்: உங்களுக்கு எதிரில் இருப்பவர் உங்களுக்கு சமமாக இருந்தால் 30 வரை எண்ணிட்டு பேசுங்க.. 

அரவிந்த்: ஓ அதான், எனக்கு நான் பேசும்போது 30 வினாடி அமைதியா இருந்தீங்களா? டாக்டருக்கே ரொம்ப கோபம் வரும்போல.. என்னைவிட பலசாலியா இருந்தா என்ன செய்றது டாக்டர்? 

மருத்துவர்: பலசாலியாக இருந்தார் என்று சொன்னால் 100 வரை எண்ணிய பிறகு பேச வேண்டும்.

அரவிந்த்: ஓகே டாக்டர்... எதிரில் இருப்பது மனைவியாக இருந்தால் என்ன பன்றது? 

மருத்துவர்: நானும் அதுக்குதான் பதில் தேடிக்கிட்டே இருக்கேன்.. நிப்பாட்டாம எண்ணிகிட்டே இரு.. வேற வழி இல்லப்பா!

No comments:

Post a Comment