ஆதிசங்கரர் தம் சீடருக்கு உபதேசமாக அருளிய பதில்களின் தொகுப்பாகத் திகழும் ஞானநூல் - பிரச்நோத்தர ரத்நமாலிகா.
அரிதான வினாக்களும் அவற்றுக்கு ஆதிசங்கரர் அருளிய துல்லிய பதில்களும் நிறைந்த இந்த ஞானப்பொக்கிஷத்திலிருந்து சில வினாக்களும் விடைகளும் .....
குறைவற்றவன் யார்?
நல்ல பிள்ளைகளைப் பெற்றவன்.
எது தெய்வம்?
நல்ல காரியமே!
கெளரவத்துக்குக் காரணம்?
யாசிக்காமல் இருத்தல்.
அன்புடன் செய்ய வேண்டியது?
ஏழைகளிடம் கருணை
.
எவன் முன்னேற்றம் அடைவான்?
வணக்கமுள்ளவன்.
மனிதனுக்குப் பகை யார்?
எதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கும் அவனது இயல்பு.
துயரம் எது?
திருப்தி படாமல் இருத்தல்.
உலகில் அதீத பயம் எதனால்?
மரணத்தால்.
கொடுமையான விஷம் எது?
பெரியோர்களை அலட்சியம் செய்வது.
சிறந்த நன்மையை அளிப்பது எது?
தர்மம்.
எது நரகம்?
பிறருக்கு வசமாதல்.
உலகம் யாருக்கு வசப்படும்?
தர்மத்தைக் கடைப்பிடிப்பவனுக்கு.
சகல சுகத்துக்கும் காரணமாவது?
புண்ணியம்.
காதுகள் மூலம் பருகவேண்டிய அமிர்தம் உண்டா?
உண்டு. சாதுக்கள் செய்யும் உபதேசமே அது.
குரு என்பவர் யார்?
எப்போதும் சீடர்களின் நன்மைக்காக முயற்சி செய்பவர்
நன்றி - சக்தி விகடன்
No comments:
Post a Comment