Monday, 25 July 2022

நாதஸ்வரம்

 

நாதஸ்வரத்தின்  நீளம்  பலவாறாக  இருக்கும்.  மிகப்  பழங்காலத்தில்  18.25  அங்குல  நீளமாக  இருக்கும் ( சுருதி 4.5 கட்டை ).

பல  மாறுதல்களுக்குப்  பின்  1941-ம்  ஆண்டு  திருவாவடுதுறை  டி.என்.ராஜரெத்தினம்  பிள்ளை  பல  முயற்சிகள்  செய்து  34.5  அங்குல  நீளமும்  2  கட்டை  சுருதியும்  கொண்ட   நாதஸ்வரத்தைக்  கொண்டுவந்தார்.  இதைப்  பாரி   நாதஸ்வரம்  என்பர்.  நீளம்  குறைந்த   நாதஸ்வரம்  திமிரி  எனப்படும்.  நீளம்  குறைந்தால்  ஒலி  உரத்து  எழும்.  சுருதி  அதிகம்.

    'இராஜவாத்தியம்'  என்று  சிறப்பிக்கப்பட்டுள்ள  இதை   நாதஸ்வரம்,  நாகசுரம்,  நாதசுரம்,  நாகஸ்வரம்,  நாயனம்  என்று  பலவாறு  அழிக்கப்படுவது  உண்டு.  இக்கருவி  பொதுவாக  ஆச்சா  மரத்தினால்  நரசிங்கன்பேட்டை ,  தேரழுந்தூர்,  வாஞ்சூர்,  திவானைக்காவல்  போன்ற  ஊர்களில்  அதற்கெனவுள்ள  ஆச்சாரிகளால்  மிகவும்  சிறப்பாகச்  செய்யப்படுகிறது.  அபூர்வமாக  வெள்ளி,  தங்கத்தினாலும்  இக்கருவி  செய்யப்பட்டது.  ஆண்டாங்கோவில்  வீராசாமி  பிள்ளை  பொன்னால்  ஆன   நாதஸ்வரம்  வைத்திருந்தார்.  ஆழ்வார்திருநகரி,  திருவாரூர்,  கும்பகோணம்,  கும்பேஸ்வரர்  கோயில்களில்  கருங்கல்லில்  செய்யப்பட்ட   நாதஸ்வரங்கள்  வாசிக்கப்படுகின்றன.

      நாதஸ்வரத்தில்  காற்றை  உட்செலுத்தி  ஊதுவதற்கு  உதவுவது  'சீவாளி' ( ஜீவஒலி).  காவி
ரிக்  கரையில்  விளையும்  கொருக்கள்  புல்லை  வெட்டியெடுத்து  நிழலில்,  பனியில்,  இளஞ்சூரிய  வெயிலில்  என  15 - 15 நாட்கள்  காயவைத்து,  வெட்டி  சிறு  துண்டுகளாக்கி  நெல்  மற்றும்  மாமிசத்தோடு  சேர்த்து  வேகவைத்து  ஆறு  மாதம்  பதப்படுத்தி  உருவாக்குவார்களாம்.

திருவாவடுதுறை,  திருவீழிமிழலை,  திருவிடைமருதூர்  போன்ற  ஊர்களில்  சீவாளி  செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment