ஆத்திரத்தோடு பார்க்கும் போது நிரபராதி குற்றவாளியாய் தெரிவான்.
அனுதாபத்தோடு பார்க்கும்போது குற்றவாளி நிரபராதியாய் தெரிவான்.ஆசை குறைந்தால் லாபமும் குறைவு, பாவமும் குறைவு.
ஆசை அறத்தை புறக்கணிக்கும்.
தவறை உணர்ந்தால் தவறு பாதியாக குறையும்.
தவறை நியாயப் படுத்தினால் தவறு இரட்டிப்பாக வளரும்.
ஒரு குற்றவாளியை உண்மைகளை மறைத்து நிரபராதி ஆக்கிவிடுவதும், ஒரு பாதிக்கப் பட்டவனை சாமர்த்தியமாய் பேசி குற்றவாளி ஆக்கி விடுவதும் மனிதர்களால் மட்டுமே இயலும். பூவினை சேதப்படுத்தாமல் தேனை உண்டு வாழும் வண்டினைப் போல், மனிதனும் உலகை சேதப் படுத்தாமல் வாழ வேண்டும். சிறிது உணவைக் கண்ட காகம் பிற காக்கைகளுடன் சேர்ந்து உண்ணுவதைப்போல மனிதனும் பிறருடைய தேவை, உரிமைகளை பரஸ்பரம் மதித்து வாழவேண் டும். இதனால் உலகம் வளமாய் இருக்கும். உயிரினங்கள் நிம்மதியாய் வாழும். இதையே அனைத்து சாதுக்களும் ஒருப்போல் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment