ப்ளாக்பெர்ரிகளில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. 100 கிராம் ப்ளாக்பெர்ரிகளில் 35 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. ப்ளாக்பெர்ரியில் கால்சியம், இரும்பு, புரோட்டீன், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.
ப்ளாக்பெர்ரியில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது, இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
நார்ச்சத்து
ப்ளாக்பெர்ரியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வரமால் தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் ப்ளாக்பெர்ரிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். பல்வேறு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதய பாதுகாப்பு
ப்ளாக்பெர்ரியில் உள்ள சத்துக்கள் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் மென்மையான இரத்த ஓட்டத்தைத் தூண்டவும் உதவும்.
ப்ளாக்பெர்ரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லும்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு
எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் கே அவசியம். ஒரு கோப்பை ப்ளாக்பெர்ரியில் 28.5 மைக்ரோகிராம் வைட்டமின் கே இருப்பதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
புற்றுநோயைத் தடுக்க
பிளாக்பெர்ரி பழத்தின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன.
No comments:
Post a Comment