இந்த பழத்தை முதன்முதலில் அமெரிக்கா சென்றிருந்தபோது பார்த்தேன். சாப்பிட்டேன். உருண்டையாக, பரங்கிக்காய் வடிவில் ஆரஞ்சு பழ அளவில் இருக்கும் இப்பழத்தின் சுவை எனக்கு பிடித்திருந்தது.
இந்தியாவில் சிம்லா பகுதியில் இவை கிடைப்பதாக அறிகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் பெர்சிமன் பழ சீசன், இந்தாண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்கியுள்ளது. இதனை ஆதாம் ஏவாள் பழம் என்றும் அழைப்பார்கள்.
குன்னூர் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி,ஆர ஞ்சு,பீச்,பிளம்ஸ்,எலுமிச்சை,லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை பெர்சிமன் பழ மரங்களும் உள்ளன. இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன. இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
இந்தப் பழம் வைட்டமின் ஏ, சி (vitamin A, C) சத்து நிறைந்த மருத்துவ குணம் வாய்ந்தது. இப்பழத்தினை எத்தனால் (ethanol) என்னும் திரவத்தில் ஊறவைத்து கழுவிய பிறகே உட்கொள்ள வேண்டும்.
மேலும் வயிற்றில் உள்ள கொடிய பூச்சிகளை வெளியேற்றும் தன்மை உள்ளது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்ைத கட்டுப்படுத்த கூடிய மருத்துவக் குணம் கொண்டது.
பொதுவாக, ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட்,செப்டம்பர் வரை பெர்சிமன் சீசன் துவங்கி நடைபெறும். ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டு இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. இப்பழமானது குன்னூர் தட்ப வெப்ப நிலையில் மட்டும் வளரக்கூடியது.
No comments:
Post a Comment