Friday, 15 July 2022

தமிழ்விக்கி



தமிழில் விக்கிபீடியாவிற்கு இணையான ஒரு தமிழ் இணையக் கலைக் களஞ்சியமாக `தமிழ் விக்கி’ வலைதளத்தை எழுத்தாளர் ஜெயமோகன், அவரது நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்திருக்கிறார். அதன் தொடக்க விழா அமெரிக்காவில் மே 7 அன்று நடைபெற்றது. மானுடவியலாளர் பிரெண்டா பெக், திருக்குறளை மொழிபெயர்த்த தாமஸ் ஹிட்டொஷி புரூக்ஸ்மா, பேராசிரியர் வெங்கட்ரமணன் மற்றும் அமெரிக்க நூலகத்தலைவர் சங் லியு ஆகியோர் இதில் கலந்துகொண்டார்கள். தமிழ் விக்கியின் ஆசிரியராக ஆய்வாளர் அ.கா.பெருமாள் பொறுப்பேற்றார். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சோ.தர்மன், சுனில் கிருஷ்ணன், பேராசிரியர் மௌனகுரு, ஜெயமோகன் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் உள்ளனர்.

தமிழ் விக்கியின் படைப்புத்துறை ஆசிரியர்களில் ஒருவரான சுனில் கிருஷ்ணன் இதுகுறித்துப் பேசும்போது, “தமிழில் தற்போதுள்ள தகவல் களஞ்சிய வலைத்தளமான விக்கிப்பீடியாவை எடுத்துக் கொண்டால், அதனுடைய ஜனநாயகம் தான் அதன் பலம். ஆனால் அதே ஜனநாயகம் அதனுடைய பலவீனமாகவும் ஆகிறது. யாரையாவது அவதூறு செய்ய வேண்டுமென்றால், உடனே நாம் வலைத்தளத்திற்குள் சென்று அவரைப் பற்றி உள்ளதை மாற்றியமைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் எளிதாக நடக்கும். அதே சமயம் தகவல்களிலும் சரி, யார் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். இதனால் தகவல்களிலும் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இப்போது தமிழ் விக்கியுமே கிட்டத்தட்ட விக்கிபீடியா போல் தான், ஆனால் தகவல்களை பரிசோதித்து, உறுதிபடுத்தும் வேலையைதான் இங்கு ஆசிரியர்கள் செய்கிறார்கள்” என்றவர், அப்போது இந்தத் தமிழ் விக்கி தளமானது ஒரு அதிகாரத்திற்குட்பட்ட தளமாக இருக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு, “இதில் குறிப்பிட்ட நபர்களைத் தவிர யாருமே எழுதமுடியாது என்று சொன்னால், அதிகாரத்திற்குட்பட்ட தளம் என்று கூறலாம். ஆனால் இங்கு எல்லாருமே பயனர்கள்தான். அவர்கள் அனுப்புவதைச் சரிபார்க்க மட்டுமே ஒரு ஆசிரியர் குழு இருக்குமே தவிர, அவர்களை எழுதவிடாமல் யாரும் தடுக்கப்போவதில்லை” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “இதை விக்கிப்பீடியாவிற்கு மாற்று என்று சொல்ல முடியாது. ஒன்றுக்கொன்று எதிர் என்றும் சொல்வதிற்கில்லை. ஒரு சில முக்கியமான கவிஞர்களுக்கு இன்றளவும் தமிழில் ஒரு விக்கி பக்கம் இல்லை. இதுபோன்று ஒரு சில இடைவெளிகள் உள்ளன. அந்த இடைவெளிகளைத் தமிழ் விக்கி நிரப்பும். விக்கிப்பீடியா தான் தமிழ் விக்கிக்கான சாத்தியத்தைத் திறந்துவிட்டது. ஒரு புது விஷயம் ஆரம்பித்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நாம் சிறப்பாக செயல்பட்டால், அது படிப்படியாக நாளடைவில் மறைந்துவிடும்” என்று விளக்கமளிக்கிறார்.

தமிழ் விக்கி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் ‘தென்றல்’ இதழ் ஆசிரியர் மணி மணிவண்ணன் இதுகுறித்துப் பேசும்போது, “தமிழ்விக்கி என்பது ஜெயமோகன் மற்றும் அவருடைய ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்ட, அவர்கள் மட்டுமே உள்ள ஒரு வலைதளமாகும். அதை அவர்கள் பொது வலைத்தளமான விக்கிப்பீடியாவிற்கு மாற்று என விக்கி என்ற பெயரிலேயே ஆரம்பிக்கிறார்கள். இவர் ஆங்கில விக்கிப்பீடியா என்பதை வெறும் இங்கிலீஷ் விக்கி என்று தான் அழைப்பார். அதேநன்றி - சக்தி விகடன் போல இப்போது தமிழ் விக்கி என்று தனது தளத்திற்குப் பெயரிட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக அவர் விஷ்ணுபுரம்.இன் என்றோ, ஜெயமோகன்.இன் என்றோ பெயரிட்டிருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே இந்தப் பெயரைத் தேர்வு செய்திருக்கிறார். விக்கிப்பீடியா என்பது ஒரு முதன்மை தகவல் வெளியிடும் தளமோ, அல்லது ஆராய்ச்சிக்கான தளமோ கிடையாது. அது ஏற்கெனவே உள்ள ஒரு விஷயத்தின் தொகுப்புதான். அதை எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் அதை அப்படி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, மக்கள் அனைவரும் எதை வேண்டுமானாலும் எழுதும் ஜனநாயகம் அதில் நன்றி - சக்தி விகடன் இருக்கும். இவர்கள் அதில் தங்களது கருத்துக்களை புகுத்தமுடியாமல் தற்போது ஆரம்பித்துள்ளதுதான் இந்தத் தமிழ்விக்கி” என்றார்.

நன்றி -  விகடன் 

No comments:

Post a Comment