Monday, 18 July 2022

பாலைப்பண் ( பொருநராற்றுப் படை )


கள்வரும் இசையின் இனிமையால் தம் தொழிலைச் செய்யாது மயங்கி நின்றுவிடுவர்.

 பாலைநிலத்து கள்வர், வழிவருவோர் பொருள்களையும் உயிரையும் கவர்வர்; பொருள் இல்லையெனில் வழிவந்தோரைக் கொன்று, அவருடைய உடல் துள்ளுவதைக் கண்டு களிப்பர். 

அத்தகைய கொடிய கள்வர் எதிர்ப்படின், அவ்வழியாகச் செல்லும் கூத்தர் முதலியோர் பாலைப் பண்ணை இனிமையாக பாடுவர். 

கள்வர், அவர் இசையில் ஈடுப்பட்டு இன்புற்று தம் கொலைக்கருவிகளையும் நழுவவிட்டுத் தமது தொழிலையும் மறந்து மயங்கி நின்றுவிடுவர். 

இச்செய்தியை, 

“ஆறலை கள்வர் படைவிட அருளினன் 

மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை.” 

என்ற பொருநராற்றுப் படையில் கூறப்பட்டுள்ளது. ‘

வழிப்பறிக்காரர்களாகிய கள்வர்கள் படைகளைக் கைவிடும்படியாக அவர்களிடம் இருந்த அருளுக்கு மாறுபட்டதான கொடுமையை மாற்றுகின்ற கேட்பதற்கினிய பாலைப்பண்” என்பது இவ்வடிகளின் பொருள்


No comments:

Post a Comment