Friday 17 November 2023

மகரிஷி அவர்களுடன்...........9 ( This Blog crossed 285 K + Views )

1981ம் ஆண்டு மகரிஷி அவர்கள்  திருச்சி நிகழ்ச்சிகளுக்காக இரண்டு  நாட்கள் ( பிப்ரவரி 17,18 ) தந்திருந்தார்கள். மகரிஷியின் திருச்சி வருகை அன்பொளி ஜனவரி 1982 இதழில் வெளியிடப்பட்டு நிறைய அன்பர்கள் ஆவலுடன் காத்திருந்தோம்.

மிக, மிக ஆவலுடன் காத்திருந்த என்னிடம் கரூர் அருள்நிதி தம்பதியர் கிருஷ்ணகவுடு & குப்புராஜ்  ஒரு நாளினைத் ( Feb 18 )  தங்களுக்கு அளிக்க பெரிதும் வேண்டினர். என்னையும் மகரிஷி அவர்களுடன் வருமாறு கேட்டுக் கொண்டனர். ஏமாற்றம் இருந்தாலும் பல புதிய இடங்களில் மன்றம் துவக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததால் மகிழ்வுடன் சில திருச்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து ஒரே நாள் மட்டும்தான் திருச்சியில் நிகழ்ச்சி நடத்த முடிந்தது 

அந்த ஒரு நாளிலும் மகரிஷி அவர்களிடம் கேட்டது, பெற்றது ஏராளம். மூன்று மணி நேரத்திற்குமேல் அவரிடம் நான் மட்டும் உரையாட கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு - பல அரிய தகவல்களைக் கூறினார். வர்ணாஸ்ரம தர்மம் பற்றி ஒரு மணி நேரத்திற்குமேல் அவர் விளக்கியது  என்னால் மறக்க இயலாது.



உடலில்  உண்டாகும் கழிவுப் பொருள்கள் பதினான்கினையும், அவை எப்போதெல்லாம் எழுச்சி பெறுகின்றனவோ அப்போதே அவற்றினை சமன் செய்துவிட வேண்டும் எனக் கூறி அதற்கான வாய்ப்பு, வசதி போன்ற அடிப்படை தேவைகளும் வேண்டுமெனக் கூறி கீழ்கண்ட பாடலைக் கூறினார்:

தூக்கம் நா வறட்சி மூத்ரம் 

           தும்மலோ டிருமல் வாந்தி 

தாக்கிடும் பசி கொட் டாவி 

          தழைமலம் ஏப்பம் சுக்கிலம்

நோக்கின் நீர் அபானவாயு 

நுவல் சுவா சத்தொடீரேழ்

தூக்குமார் வேகந் தன்னை 

ஸ்வஸ்தன்தான் அடக்கி டானே

பாடலைக் கேட்டவுடன் ' இவ்வளவு அழகாக தமிழில் பாடல் எழுதப்பட்டு  கடைசி வரியில் ஸ்வஸ்தன் என்ற வார்த்தை சற்று நெருடலாக உள்ளதே? ' என மகரிஷி அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு மகரிஷி அவர்கள் சொன்ன விளக்கம் -

ஓர் ஆயுர்வேத நூல் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு ( எனக்கு பெயர் மறந்துவிட்டது ) அதில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு அர்த்தங்களைக் கூறினார். அவை -

1. உடல், மனம், ஆன்மா மற்றும் புலன்களிடையே இணக்கங்கள் ஆனந்தமயமான இருக்கவேண்டும்.

2. பதினான்கு கழிவுகளுமுதலில் தங்கியிருக்கக் கூடாது

3. மூன்று தோஷங்கள்( வாத, பித்த &  கபம் ), ஏழு தாதுக்கள் சம நிலைப்படவேண்டும் 

4.  ஆன்மீகத்திலே உயர்ந்திருக்க வேண்டும் 

இத்தனையும் கொண்ட   ஒரு வார்த்தைதான் ஸ்வஸ்தன். ஆரோக்கியம் என்றால்  தமிழில் இப்போது உடல்நலம் என்றுதான் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். ஆரோக்கியமும்,  ஸ்வஸ்தன் என்ற வார்த்தையின் அர்த்தங்களும் ஒன்றுதான் என முடித்தார்கள்.

உலக சுகாதார நிறுவனமும் ( WHO ) health என்பதற்கான definition கீழ்வருமாறு அமைத்துள்ளது :

Health is a state of physical, mental and social well-being, not just the absence of disease or infirmity. 

இதில் ஆன்மிகம் விடுபட்டுள்ளது. இதனையும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அறிகின்றேன்.


To read மகரிஷி அவர்களுடன்........5...     click HERE

To read மகரிஷி அவர்களுடன்........6...     click  HERE

To read மகரிஷி அவர்களுடன்........7...     click HERE

To read மகரிஷி அவர்களுடன்........8        click HERE



No comments:

Post a Comment