காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு நாட்டின் மீது திடீரென்று படை எடுத்துவிட முடியாது. படை எடுப்பது என்றால் சர்வதேச அரங்கில் அது எந்தவிதமான விமர்சனத்தை உண்டாக்கும் என்பதை ஆலோசிக்க வேண்டும். ஒரு நாட்டை, போரில் வெல்லுவதற்கு முன்பு, அந்த நாட்டின் உறவு நாடுகளைத் தன் பக்கம் இழுப்பது, பிற நாடுகளின் உறவை வலுப்படுத்தி தன் பக்கம் சக்தியை வளர்த்துக் கொள்வது, கூடுமானவரை பொருள் சேதமும், உயிர்ச் சேதமும் வராமல் வெற்றி பெற ஆலோசிப்பது ஆகியனவெல்லாம் முக்கியம்.
நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணமும் இராஜதந்திரமானவை. இவையெல்லாம் வேண்டும். தன்னிடம் வலிமையே இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடந்து கொள்ளக்கூடாது.
No comments:
Post a Comment