கணவன்மார்கள்
பொன்னிறமான தோசைக்கு பின்னால்,கரு கருவென தோசை கல் இருப்பதை போல
கண்கவரும் சிற்பத்திற்கு பின்னால் , கிழிந்த வேட்டியுடன் ஓர் சிற்பி இருப்பதை போல
அழகான ரோஜாமலருக்கு காவலாளியாய் இருக்கும் முள்களை போல தான் கணவன் மார்களும்,
தோசை தாங்கும் வெப்பத்தை விட, தோசைக்கல் பல மடங்கு வெப்பத்தை தாங்கினாலும் ,இறுதியில் அந்த தோசைக்கு கிடைக்கும் அங்கீகாரம் ,தோசைக்கல்லுக்கு கிடைப்பதில்லை.அப்படி பட்ட அங்கீகாரத்தை தோசைக்கல் எதிர்பார்ப்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை.
சந்தோஷம் என்ற ருசியுடன் ,சிரிப்பு என்ற பொன்னிறம் தோசைக்கு கிடைப்பதே, தோசைக்கல்லின் லட்சியம்.
மனைவியை கிண்டல் செய்யும் ஜோக்குகள், மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுவது ஏன்? ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்கிறதா?
எல்லாம் இயலாமையின் ஒரு வெளிப்பாடு தான் .... வீட்டில் பேச முடியாதவற்றை ஜோக்குகள், மீம்சுகள் வாயிலாக ஒரு துணிவுள்ள அப்பிராணி வெளியிட, அதை பார்த்த மற்றை அப்பிராணி கணவன் மார்கள், இதை சாக்காக வைத்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
No comments:
Post a Comment