Friday 28 October 2022

மூலிகை



மூலிகை   கேள்வி பதில் 

கேள்விகள் -

1.குப்பையில் கிடந்தாலும் பயனுள்ள மூலிகை . அது என்ன?

2.வல்லாரை வல்லவராக்கும் நினைவாற்றலை  வழங்கும் .மூலிகை . அது என்ன?

3. மேனியை பொன்னக்குமாம் .மூலிகை . அது என்ன?

4காமக்கண்ணி என்னும் சங்கப்   புலவர் காமாட்சி என்பதை அறிவோம்.

கறுப்புக் கண்ணி மூலிகை எது ?

5.சின்னப்  பெண்   என்னும் மூலிகை எது ?

6.மஞ்சள் காமாலைக்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?

7.நப்பசலை என்ற சங்கப் புலவரை அறிவோம் . அவர் பெயரில்

என்ன தாவரம் உளது?

8.கை இல்லாதவன் பெயரில் ஒரு மூலிகையா ?

9.ஸ்யவனப் பிராஸ் எனும் லேகியத்தின் முக்கிய தாவரம் என்ன?

10.காலையில் சுகமாக பேதியை உண்டாக்கும் காய் எது?

11. இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?

12.தண்ணீரை சுத்தப்படுத்தும் காய் எது?


பதில்கள் 



1.குப்பைமேனி

2.வல்லாரை

3.பொன்னாங்கானி (பொன் ஆகும் காண்  மேனி)

4.கரிசலாங்கண்ணி

5.சிறியாநங்கை

6. கீழாநெல்லி

7.பசலைக்கீரை

8.முடக்கத்தான்

9.நெல்லிக்காய்

10.கடுக்காய்

11.சர்ப்பகந்தி

12. தேற்றான்கொட்டை

No comments:

Post a Comment