Sunday 9 October 2022

இல்லறத்தில் இருந்து கொண்டே ஞானம் - புத்தர்

இல்லறத்தில் இருந்து கொண்டே ஞானம் பெற, புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் 

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க வருகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டு, விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேனே. ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் என்னை மிகவும் நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை பார்த்து அல்ல தன்னை பார்த்துத்தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தன் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.

அடுத்து அவர் மனைவி எளிமையான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

இந்த பதில்தான் நம் அனைவருக்கும்.

இல்லறத்தில் இருந்து கொண்டே ஞானமடைய முதலில் மன உறுதி தேவை,

No comments:

Post a Comment