Friday, 7 October 2022

சிவானந்தரின் அமுத மொழிகள்

எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள்உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம்  செய்யுங்கள்சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.

மிளகாய்பூண்டுபுளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்காபிடீமாமிசம்மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் 
பயிற்சியோஉடற்பயிற்சியோ செய்யுங்கள்நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள்முடிந்தால்சுறுசுறுப்பை 
உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.

தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள்விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லதுஇது மனதுக்கு நல்லதுகண்வாய்செவிமூக்குநாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் 
வைத்திருப்பது நல்லது.

உண்மையே பேசுங்கள்.இரக்கமும்கனிவும் கொண்டிருங்கள்
எண்ணத்தாலும்சொல்லாலும்செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.

நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள்நன்மைக்கான 
நேரம் வரும் வரை காத்திருங்கள்உழைத்துப் பணம் சேருங்கள்நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்சகிப்புத்தன்மையுடன் பிறர் 
குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள்நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும்சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.

தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள்உங்கள் சாதனைகளையும்ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள்கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.

உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்எளிய வாழ்க்கையையும்உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.

 பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு
தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள்நீங்கள் 
செய்யும் பணியையோதொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் 
வழிபாடாகச் செய்யுங்கள்அதை அவருக்கே அர்ப்பணித்து 
விடுங்கள்.

உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள்உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.

பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள்ஆடம்பரம்போலி கவுரவம்டம்பம்கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.

கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள்எல்லா 
நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள்காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் 
பணிகளைத் தொடங்குங்கள்.

அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் 
பாடல்கள் பாடுங்கள்எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள்
வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.

No comments:

Post a Comment