சாக்ரடீஸின் வீடு கிரேக்க தத்துவ மேதை சாக்ரடீஸ், தாம் குடியிருப்பதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அது மிகவும் சிறியதாக இருந்தது. அவரைப் பார்க்க வந்த ஒருவர், சாக்ரடீஸிடம், ‘‘உலகம் புகழும் தத்துவ ஞானியான தாங்கள் இவ்வளவு சிறிய வீடு கட்டுகிறீர்களே, இது எப்படி போதும்?’’ என்று கேட்டார். ‘‘இந்தச் சிறிய வீட்டை நிரப்பும் அளவுக்காவது உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனது சந்தேகம்’’ என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவர் அதன் பிறகு பேசவே இல்லை!
No comments:
Post a Comment