Sunday 11 June 2023

அக்னி நட்சத்திரம் முடிந்தும்கூட....... மீம்ஸ் Thanks to OneIndia Tamil

ஒருவழியாக, கடந்த 26ம் தேதி அக்னி முடிந்தாலும், வெயில் இன்னும விடவில்லை.. சென்னை, வேலூர், மதுரை என ஒவ்வொரு மாவட்டங்களிலும் 100 டிகிரியை கடந்து பிளந்து கட்டிவருகிறது.. இந்த மாதத்தில் நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ட் வெப்பம் பதிவாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்படி அதிகரித்தது இது இரண்டாவது முறையாகும்.. கடந்த 1948-க்கு பிறகு, இந்த அளவுக்கு பதிவானது இது 7வது முறை என்றும் வானிலை நிபுணர்கள் அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள்.

எனினும், வீட்டிற்குள்ளேயே புழுக்கம் அதிகமாகி, கடும் அவதிக்கு பொதுமக்கள் உள்ளாகி வருகிறார்கள். இதனால் கரண்ட் பில்லும் இந்த வெயில் காலங்களில் அதிகமாகி வருவது, நடுத்தர மற்றும் ஏழை மக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும்கூட வெயிலின் தாக்கம் நீடிப்பதால், ட்விட்டர்வாசிகள் இதையே மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகிறார்கள்.. இணையத்தில் கண்ணில் பட்ட காமெடி மீம்ஸ்கள்தான் இவை -







No comments:

Post a Comment