- பிடிக்காதவர்களுடன் சற்று விலகி, ஆனால் புன்முறுவலுடன் நலம்-நலமறிய-அவா வுடன் இருப்பார்.
- தலைவர், தல, தளபதி போன்ற வெட்டிப் புகழாரங்கள் உபயோகிக்க மாட்டார்.
- தான் மறுக்கும் கருத்துகளை சபையில் தேவையில்லாமல் பகிரமாட்டார்.
- தன் முதலீடுகள் பால் தந்து, அவ்வப்போது குட்டிகளும் போட்டு வளரும் தன்மை உடையதாய் திட்டமிடுவார்.
- தன் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியுடையவராய் காணப்படுவார்.
- மனதுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை விலை பாராமால் அடைவார்/அனுபவிப்பார்.
- புத்திசாலிகளிடம் கற்பார், ஆனால் ‘லூசுப் பயலு’களிடம் தான் அதிகம் கற்பார். 😃
- நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருவார்.
- படிக்காமல், மனதார பிடிக்காமல் likeகள் போட மாட்டார்.
- கவனத்தேடலுக்காக குற்றம் கண்டுபிடிக்கமாட்டார்.
No comments:
Post a Comment