Monday, 18 September 2023

கொழுக்கட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்

கொழுக்கட்டையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கார கொழுக்கட்டை மற்றொன்று இனிப்பு கொழுக்கட்டை. இதில் இனிப்பு கொழுக்கட்டையைத் தான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவர். இந்த இனிப்பு கொழுக்கட்டையானது அரிசி மாவு, வெல்லம், தேங்காய், பருப்பு, நெய், ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தி முதன் முதலில் எங்கிருந்து தொடங்கியது? அதன் பின்னிருக்கும் சொல்லப்படாத உண்மைகள்..! 

விநாயகர் சதுர்த்தி அன்று பாரம்பரியமாக செய்யப்படும் கொழுக்கட்டை ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது என்பது தெரியுமா? 

ஆம், கொழுக்கட்டையில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. கொழுக்கட்டையை உட்கொண்டால், அதில் உள்ள உட்பொருட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். 

இப்போது இனிப்பு கொழுக்கட்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம். எந்த கொழுக்கட்டை சிறந்தது ஏன்? கொழுக்கட்டைகளை வேக வைத்தோ அல்லது எண்ணெயில் போட்டு பொரித்தோ செய்யலாம். ஆனால் இவற்றில் வேக வைத்து தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளே சத்தானது. ஏனெனில் ஆவியில் வேக வைக்கும் போது, அதில் உள்ள சத்துக்கள் அப்படியே தக்க வைக்கப்படுகின்றன. மேலும் ஆவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு மென்மையாக இருப்பதோடு, எளிதில் செரிமானமாகி, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.

கொழுக்கட்டை மாவு 

கொழுக்கட்டை மாவு என்பது பச்சரிசி மாவு. இதில் மக்னீசியம் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது மற்றும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. அதோடு இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருந்து, பசியுணர்வைக் குறைக்கிறது.

தேங்காய் 

தேங்காய் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள். இது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதயத்தை வலுப்படுத்துகிறது. கொழுக்கட்டை செய்யும் போது தேங்காயை சேர்ப்பதால், அது மன அழுத்தத்தை நீக்கி, செரிமான மண்டலத்திற்கு ஒருவித குளிர்ச்சியை அளிக்கிறது. அதோடு இது நச்சு நீக்கும் செயல்முறையை அதிகரிக்கிறது மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

நீங்க சாப்பிடவே கூடாதாம் தெரியுமா? 

வெல்லம் 

கொழுக்கட்டையில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை சேர்ப்பது நல்லது. ஏனெனில் வெல்லத்தில் தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க், செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக வெல்லம் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும். 

நெய் 

கொழுக்கட்டையில் நெய் சேர்க்கும் போது, அது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. முக்கியமாக நெய் குடல் சுவரில் உள்ள காயங்களை குணப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கிறது. முக்கியமாக இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

பாசிப்பருப்பு 

பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதோடு கொழுப்புக்கள் இழப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் இதய நோயைத் தடுக்கிறது. இப்படி கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிப்பதால், இந்த விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிட யோசிக்காதீர்கள். ஆனால் எதையும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment